என் முகத்திலேயே முழிக்காதீங்க! கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிடம் சீறிய விஜய்? கண்ணீர் விட்ட அருள் விக்னேஷ்?
சென்னை: கள்ளக்குறிச்சி எம்.ல்.ஏ அருள் விக்னேஷை முதல்வர் விஜய் கடுமையாக கண்டித்ததாகவும், என் முகத்திலேயே முழிக்காதீங்க என காட்டமாக கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. கூடவே இருந்த புஸ்சி ஆனந்தும் அருள் விக்னேஷை சரமாரியாக வார்த்தைகளால் விளாசியதாக சொல்லப்படுகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.

என் முகத்திலேயே முழிக்காதீங்க..
அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. துறையூர் தொகுதி எம்.எல்.ஏவும் துணை சபாநாயகருமான மு. ரவிசங்கர் மனு அளிக்க வந்தவரை தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அடுத்தடுத்து தவெகவினர் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், கடந்த 11 ஆம் தேதி முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏக்களையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார்.
மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில், முதல்வர் விஜய் எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்த பிறகு எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக புறப்பட்டு சென்றனர். இதில் சர்ச்சையில் சிக்கிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கடைசி நபராக புறப்பட்டு சென்றார். இறுக்கமான முகத்துடன் அருள் விக்னேஷ் வெளியேறியதை பார்க்க முடிந்தது.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி எம்.ல்.ஏ அருள் விக்னேஷை முதல்வர் விஜய் கடுமையாக கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அருள் விக்னேஷை முகம் கொடுத்து கூட பார்க்காத விஜய், என் முகத்திலேயே முழிக்காதீங்க என காட்டமாக கண்டித்தாராம். கூடவே இருந்த புஸ்சி ஆனந்தும் அருள் விக்னேஷை சரமாரியாக வார்த்தைகளால் விளாசியதாக சொல்லப்படுகிறது.
அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி
அருள் விக்னேஷ் விவகாரம் தவெகவுக்கு கட்சி ரீதியாக மட்டுமின்றி ஆட்சி ரீதியாகவும் கடும் நெருக்கடியை கொடுத்து இருப்பதால், முதல்வர் விஜய் கடும் டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி மற்றும் இடது சாரி தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை இந்த விவகாரத்தில் தெரிவித்ததோடு, புகாரில் உண்மை இருந்தால் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் தொடர்பாக ஆட்சியர் தரப்பில் இருந்து தலைமை செயலாளரிடம் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது. இதற்கிடையே, சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ அருள் விக்னெஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அளித்த பேட்டியில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து இருந்தார். அருள் விக்னேஷ் கூறுகையில், ஆட்சியருக்கு நான் ஏன் மெசேஜ் அனுப்ப வேண்டும்? ஒரு மாவட்டத்தின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரியிடம் தவறான கண்ணோட்டத்தில் எப்படி நடந்துகொள்ள முடியும்? ஆட்சியருக்கு எந்தத் தவறான நோக்கத்திலும் மெசேஜ் அனுப்பவில்லை.
என் மீது வீண்பழி
ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரி வீட்டுக்கு சென்று பிரச்சனை செய்ததாக சொல்வதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இது முழுக்க முழுக்க திமுக ஐடி விங் மூலமாகப் பரப்பப்படும் பொய்யான தகவல்.. கடந்த திமுக ஆட்சியில் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த வேலு, வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ ஆகியோர் அடிப்படை வசதிகள் இல்லாமல் கள்ளக்குறிச்சி புதிய பஸ் ஸ்டாண்டை வைத்திருந்தனர்..
பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள இடங்களில் பிளாட் போட்டு பல கோடி ரூபாய் முறைகேடும் நடந்துள்ளது. இப்போது அந்த பஸ் ஸ்டாண்டை சிறப்பாக மாற்றுவதற்கு நான் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறேன். என் மீது வீண்பழி சுமத்தி தவெக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது" என்று கூறியிருந்தார்.
அதேநேரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரம் பற்றி இதுவரை எதுவுமே தெரிவிக்கவில்லை. குற்றச்சாட்டு தொடர்பாக மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இதனால், அருள் விக்னேஷ் மீதான சர்ச்சை ஓயாமல் அவருக்கு நெருக்கடியை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.





Click it and Unblock the Notifications
