தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்.. சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டுவருகிறார் முதல்வர் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளிலும் இனி தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது குறித்து நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தீர்மானத்தை கொண்டுவர இருக்கிறார்.

சமீப நாட்களாக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடைசியாக பாடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்படி இருக்கையில் நாளை முதல்வர் கொண்டுவர உள்ள தீர்மானம் கவனம் பெற்றிருக்கிறது.

Tamil Thai Vazhthu

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை

தவெக அரசு பொறுப்பேற்றத்திலிருந்து, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சர்ச்சை அதிகரித்து வருகிறது. அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் 2வதாகவும், கடைசியாகவும் பாடப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன் மூலம், தவெக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கான முக்கியத்துவத்தை விட்டுக்கொடுத்திருக்கிறது என்றும் விமர்சனங்கள் கிளம்பின.

இப்படி இருக்கையில்தான், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அந்த சம்பவம் நடந்தது. பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 3வதாக பாடப்படும் என்று பல்கலை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, முதலில் வந்தே மாதரம் இரண்டாவதாக தேசிய கீதமும்.. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழத்தது பாடலும் பாடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரை தாங்கியுள்ள பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு 3ம் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததை தவெக கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட.. அனைத்து கட்சிகளும் கண்டித்திருந்தன.

இந்த பின்னணியில்தான், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதல் இடம் கொடுக்கும் வகையில், புதிய தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் நாளை சட்டமன்றத்தில் கொண்டுவர உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+