சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்த முதல்வர் விஜய்! திரண்ட மக்கள்!
சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார். அரசினர் தோட்டம் ரயில் நிலையத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்ற விஜய், நந்தனம் மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கத்திப்பாராவில் 101 அடி உயரத்தில் 1,305 அடி தூரத்தில் பிரமாண்டமான உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் அறிந்து முன்கூட்டியே அங்கு மக்கள் குவிந்தனர். அரசினர் தோட்டம் ரயில் நிலையம் முன்பாக மக்கள் குவிந்து இருந்த நிலையில், அவர்களை பார்த்து விஜய் கை அசைத்துவிட்டு சென்றார். அதேபோல, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் முன்பாகவும் விஜய்யை பார்ப்பதற்காக மக்கள் காத்திருந்தனர்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று மெட்ரோ ரயில் நிலையத்தின் 2ம் கட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மெட்ரோ நிலைய தலைமை அலுவலக அதிகாரிகளுடனும் ஆசோலசை நடத்தினார். இதற்காக இன்று மாலை முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து விஜய் பயணம் செய்தார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. எனினும் விஜய் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய இருந்த தகவல் அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.
விஜய் அரசினர் தோட்டம் ரயில் நிலையத்திற்கு வந்ததுமே அவரது ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இதையங்கு அங்கு டிக்கெட் எடுத்த விஜய், நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணிகளோடு சென்றார். நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் விஜய் வந்து இறங்குவார் என்பதை அறிந்த மக்கள் முன்கூட்டியே அங்கு வந்து காத்திருந்தனர். நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய்யை பார்த்த மக்கள் உற்சாகத்துடன் கைகளை காட்டினர்.
விஜய்யும் பதிலுக்கு சிரித்தவாறே கைகளை காட்டிவிட்டு நடந்தே மெட்ரோ தலைமை அலுவலகம் சென்றார். முதல்வர் விஜய் சமீப நாட்களாக திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன் தினம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஜய் ஆய்வு செய்தார்.
நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், காரில் ஏறி கத்திப்பரா சென்றார். கத்திப்பாராவில் நடைபெற்று வரும் மெட்ரோ மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். போரூர் - பூந்தமல்லி இடையே ஆளில்லா மெட்ரோ ரயில் இயக்கம் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
கத்திப்பாராவில் ஆய்வு
கத்திப்பாராவில் 101 அடி உயரத்தில் 1,305 அடி தூரத்தில் பிரமாண்டமான உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் மற்றும் கிண்டி புறநகர் ரயில் நிலையத்துடன் புதிய நடைமேம்பால பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இவற்றையும் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். லிஃப்ட் மூலம் பாலத்தின் உச்சிக்கு சென்ற விஜய் அங்கு நடக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வர் விஜய்யை பார்க்க கிண்டி கத்திப்பாராவிலும் பொதுமக்கள் கூடியிருந்தனர். பேரிகார்டுகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது முதல்வர் விஜய்யை பார்த்த பயணிகள் உற்சாகம் அடைந்தனர். விஜய்யை பார்த்து பயணிகள் அவருடன் கைகளை குலுக்கி உரையாடினார். சில பயணிகள் விஜய்யுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.


Click it and Unblock the Notifications
