விஜய்-க்கு வந்த ரூ.12 லட்சம் கோடி பிரச்சனை.. அதுக்குள்ள லிஸ்ட் போட்டாச்சா?

Subscribe to Oneindia Tamil

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை அமைக்க உள்ள நிலையில், ஆட்சி பொறுப்புக்கு வந்த உடனே முதல்வராக இருக்கும் விஜய்-க்கு முதல் சவால் அவருடைய தேர்தல் அறிக்கை தான்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது விஜய்-யின் தேர்தல் அறிக்கை வணிக மற்றும் நிதி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் 10 தலைப்புகளின் கீழ் மொத்தம் 336 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமானால் ஆண்டுக்கு சுமார் ரூ.12 லட்சம் கோடி வரை நிதி தேவைப்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

Vijay TVK Politics Vijay TVK Manifesto Cost Rs 12 Lakh Crore Promise Tamil Nadu Budget Challenge TVK Fiscal Burden Vijay Welfare Promises 12 Vijay TVK manifesto cost Rs 12 lakh crore TVK promises Tamil Nadu fiscal challenge 2026 TVK election manifesto burden Vijay welfare promises Tamil Nadu Tamil Nadu budget vs TVK promises Rs 4 39 lakh crore TVK schemes additional Rs 42 000 crore first year burden women assistance hike TVK free LPG cylinders cost Tamil Nadu farm loan waiver TVK Tamil Nadu GSDP fiscal deficit Thalapathy Vijay election promises TVK 336 promises analysis Tamil Nadu economy impact TVK 12 2026 4 39 42 000 336

பெண்கள், மீனவர்கள், விவசாயிகள் வாக்குறுதிகள்

தவெக அறிக்கையில் பெரும்பாலான வாக்குறுதிகள் பெண்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் நலனை மையமாகக் கொண்டுள்ளன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர், கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.25,000 உதவி, மகளிர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லாக் கடன், முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.20,000 ஆகியவை முக்கிய வாக்குறுதிகளாகும்.

பெண்கள், மீனவர்கள், விவசாயிகளுக்கான 14 முக்கிய வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்ற ரூ.1.82 லட்சம் கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளின் மொத்த நிதிச் சுமை

தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மற்ற வாக்குறுதிகளின் விவரங்கள் பின்வருமாறு:
பட்டதாரிகளுக்கு உதவித்தொகை ரூ.13,791 கோடி
டிப்ளமா படித்தவர்களுக்கு உதவித்தொகை ரூ.604 கோடி
முதியோர், மாற்றுத்திறனாளி, திருநங்கை உதவித்தொகை ரூ.12,369 கோடி
குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமைத்தொகை ரூ.68,150 கோடி
ஆண்டுக்கு 6 கால சிலிண்டர் இலவசம் ரூ.12,655 கோடி
200 யூனிட் மின்சாரம் இலவசம் ரூ.11,472 கோடி
மகளிர் குழுக்களுக்கு கடன் ரூ.23,823 கோடி
கர்ப்பிணி பெண்களுக்கு உதவி ரூ.2,250 கோடி
பிறக்கும் குழந்தைக்கு மோதிரம் ரூ.1,395 கோடி "தாய்மாமன் தங்க மோதிரம்" என்ற திட்டத்தின் கீழ்
அரசு பேருந்தில் பெண்கள் இலவச பயணம் ரூ.5,760 கோடி
மின்பிட தடைக்காலத்தில் நிலாரணம் ரூ.2,096 கோடி
மின்வார்க்குக்கு காப்பீடு ரூ.2.62 லட்சம் கோடி
விவசாய கடன் தள்ளுபடி ரூ.15,000 கோடி
விவசாயிகளுக்கு நிதியுதவி ரூ.12,000 கோடி

மாநில பட்ஜெட்டுடன் ஒப்பீடு

தமிழ்நாட்டு அரசின் 2025-ம் ஆண்டு மொத்த பட்ஜெட் ரூ.4.39 லட்சம் கோடி மட்டுமே. ஆனால் தவெகவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற மட்டும் இதைவிட பல மடங்கு நிதி தேவைப்படுகிறது. மேலும், மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை 2026-27-ம் ஆண்டுக்கு ரூ.1.22 லட்சம் கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம்) இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்களுக்கான மாத உதவித்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500-ஆக உயர்த்துவதால் மட்டும் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.21,617 கோடி செலவாகும்.

நிபுணர்களின் கணக்குப்படி, இந்த 14 வாக்குறுதிகளை நிறைவேற்றவே முதல் ஆண்டிலேயே கூடுதலாக ரூ.42,000 கோடி தேவைப்படும். இது தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என கணக்கிடப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசின் 2025-ம் ஆண்டு மொத்த பட்ஜெட் ரூ.4.39 லட்சம் கோடியாக இருக்கும் போது விஜய் அளித்த வாக்குறுதி 12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதை எப்படி புதிய முதல்வரான விஜய் சமாளிப்பார். அதிலும் குறிப்பாக தங்கம் தொடர்பான திட்டங்கள், சிலிண்டர் திட்டங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை.

இந்த நிலையில் ரூ.12 லட்சம் கோடி நிதி சுமையை குறைக்க நல திட்டங்களுக்கு கடுமையான வரம்பு விதிக்கப்பட்டு பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். மேலும் ஏற்கனவே தமிழ்நாடு நிதி பாற்றாக்குறையில் இருக்கும் வேளையில் எப்படி கூடுதல் நிதி ஆதாரத்தை உருவாக்குவது என்பது அடுத்த முக்கிய பிரச்சனை. அப்போ விஜய்-க்கு கடன் வாங்குவது தான் தீர்வா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+