பழுதான படகில் தத்தளித்த மீனவர்கள்.. கைது செய்த இலங்கை கடற்படை! ஆக்‌ஷன் எடுங்க! முதல்வர் விஜய் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று கடிதம் எழுதியுள்ளார். மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், வெளியுறவுத் துறை அமைச்சர் தனிப்பட்ட தலையீட்டையும் விரைவான பதிலையும் எதிர்பார்ப்பதாக அந்த கடித்தத்தில் கூறியுள்ளார்.

அந்த கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள் கடற்படையினர். கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது இன்று (6.8.2026) இலங்கைக் மீனவர்களையும் அவர்களின் விசைப்படகையும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரவே தாம் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

CM Vijay Urges Jaishankar

இச்சம்பவத்தில், இயந்திரக் கோளாறு காரணமாக அப்படகு நெடுந்தீவு கரையை ஒட்டித் தரைதட்டி நின்ற நிலையில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் (IMBL) தாண்டியதாகக் கூறி, அப்படகையும் அதில் இருந்த மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

முதல்வர் விஜய்

நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைதுசெய்து வருவது மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து, பாக் ஜலசந்தியை நம்பி வாழும் மீனவர்களின் மத்தியில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது எனவே, உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கெனவே சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்து, பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஜெய்சங்கர்

இப்பிரச்சனை குறித்து கூட்டு செயல்பாட்டுக் குழு (JWG) மூலமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நிகழாவண்ணம் தீர்வுகாண உதவும். நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் தனிப்பட்ட தலையீட்டையும் விரைவான பதிலையும் எதிர்பார்க்கிறேன்" என அந்த கடித்தத்தில் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சிட்டை பெற்று சுமார் 500 மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது ஒரு படகு பழுதாகி நெடுந்திவு கடல் பகுதிக்குள் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 11 பேரை கைது செய்து உள்ளது.

இலங்கை கடற்படை

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்திய போது மீனவர்கள் தங்கள் மீன் பிடிக்க வந்த படகு பழுதாகி எல்லை தாண்டி வந்ததாக மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து இலங்கை கடப்படையினர் முறையாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை கைது செய்வது தொடர் நடவடிக்கையாக இருந்து வருவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+