ராகுல் காந்தியை விட விஜய்யே சிறந்த பிரதமர் வேட்பாளர்.. ஏன் தெரியுமா? தெளிவான 10 காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தவெக தலைவர் விஜய் நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்தில் ராகுல் காந்தியின் தூதர்களான மாணிக்கம் தாகூரையும் பிரவீன் சக்கரவர்த்தியையும் விஜய் பெரிதாக கண்டுகொள்ளாமல் திருப்பி அனுப்பியது காங்கிரஸ் மேலிடத்தை உச்சக்கட்ட ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.

எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் தேசிய மாற்று என்று காங்கிரஸார் மார்தட்டி வரும் நிலையில், பல ஆண்டுகளாக.. சரியாக சொல்லப்போனால் 3 லோக் சபா தேர்தலாக அரசியலில் திணறி வரும் ராகுல் காந்தியை விட, விஜய்யே மோடிக்கு எதிரான மிகச் சரியான, பலமான பிரதமர் வேட்பாளர் என்பதற்கான 10 அனல் பறக்கும் காரணங்களை அரசியல் கள எதார்த்தங்கள் சுட்டிக்காட்டுகின்றன:

vijay rahul gandhi

1. சுயமாக வந்தவர் vs வாரிசு அரசியல்: ராகுல் காந்தி நேரு-காந்தி குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை அரசியல் வாரிசாக, எந்தவொரு சுய அரசியலும் போராட்டமும் இன்றி கட்சியின் உச்சப் பதவிகளை அடைந்தவர். ஆனால் விஜய், அரசியல் பின்னணி எதுவும் இன்றி தனது சொந்த உழைப்பாலும், மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாலும் மட்டுமே இந்த உயரத்தை எட்டிய ஒரு தலைவர். இந்திய ஜனநாயகத்தில் வாரிசு அரசியலை வெறுக்கும் இன்றைய இளைஞர்களுக்கு விஜய்யே முதன்மை விருப்பம்.

2. முதல் தேர்தலிலேயே தனித்த மெகா வெற்றி: ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகப் பல மாநிலத் தேர்தல்களிலும், 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களிலும் தொடர் தோல்விகளையே சந்தித்தது. ஆனால் விஜய்யோ, களமிறங்கிய முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே திமுக-காங்கிரஸ் உள்ளிட்ட 22 கட்சிகளின் அதிகார பலத்தை எதிர்த்து நின்று, தனித்து 35% வாக்குகளை அறுவடை செய்து முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்துக் காட்டியவர்.

3. வட இந்தியாவிலும் வீசும் அசுர வசீகரம் : பல ஆண்டுகளாக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ராகுல் காந்தி முகாமிட்டும் அவரால் அங்குள்ள வாக்காளர்களை முழுமையாகக் கவர முடியவில்லை. ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் விஜய் நடித்த திரைப்படங்கள் மூலமும், தற்போது உருவாகியுள்ள டிஜிட்டல் அலையின் மூலமும் சாதாரண இளைஞர்களிடம்கூட விஜய்க்கான வசீகரமும் ஏற்பும் ராகுலை விட மிக அதிகமாக உள்ளது.

4. அதிகாரப்பூர்வ மக்கள் செல்வாக்கு: ஆட்சிக்கு வந்து வெறும் மூன்றே மாதங்களில், 'மூட் ஆஃப் தி நேஷன்' தேசியக் கருத்துக்கணிப்பில் 9.2% ஆதரவுடன் விஜய் நாட்டின் மூன்றாவது சிறந்த பிரதமர் தேர்வாக உருவெடுத்துள்ளார். பல மூத்த தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி விஜய் பெற்றுள்ள இந்த வளர்ச்சி, தேங்கி நிற்கும் ராகுல் காந்தியின் வாக்கு வங்கியை விட மிக வேகமானது.

5. ஊழல் கறையற்ற சுத்தமான பின்னணி காங்கிரஸ் கட்சியின் வரலாறு முழுவதும் நேஷனல் ஹெரால்ட் முறைகேடு, நிலக்கரி, போஃபோர்ஸ் என எண்ணற்ற மெகா ஊழல் குற்றச்சாட்டுகளாலும், விசாரணைகளாலும் சூழப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் விஜய் மீதோ அல்லது அவரது தவெக நிர்வாகத்தின் மீதோ இதுவரை எந்தவொரு ஊழல் அல்லது முறைகேடு புகார்களும் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு அவரது பொதுவாழ்க்கை முற்றிலும் தூய்மையானதாக உள்ளது.

6. 100 நாள் ஆட்சியில் நிரூபிக்கப்பட்ட நிர்வாகத் திறன்: ராகுல் காந்தி இதுவரை எந்தவொரு அரசுப் பொறுப்பிலோ, அமைச்சரவையிலோ அல்லது முதலமைச்சர் பதவியிலோ அமர்ந்து நிர்வாகத் திறமையை நிரூபித்ததே இல்லை. ஆனால் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே துரிதமான நடவடிக்கைகள், தவறுகளைத் திருத்திக்கொள்ளும் அணுகுமுறை, மற்றும் சாமானியர்களுக்கான மக்கள் நலத் திட்டங்கள் மூலம் விஜய் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை நிரூபித்துள்ளார்.

7. பெண் வாக்காளர்களின் பெரும் ஆதரவு: தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே சினிமா மற்றும் அரசியல் வழியே பெண்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விஜய் விளங்குகிறார். குடும்பத் தலைவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் தாய்மார்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு தலைவராக விஜய் இருப்பதால், தேர்தல் களத்தில் வாக்குச் சாவடிகளில் இது மிகப்பெரிய வாக்கு வங்கியாக மாறுகிறது. வடஇந்திய பெண்களின் சாய்ஸ் ராகுலை விட விஜய்தான்.

8. முடிவெடுப்பதில் காட்டும் துணிச்சல்: ராகுல் காந்தி முக்கியமான அரசியல் தருணங்களில் தயங்குவதாகவும், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதாகவும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் விஜய், சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே பல நூறு கோடி ரூபாய் சம்பளத்தைத் தூக்கியெறிந்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். அதே துணிச்சலோடு, கூட்டணிக் கட்சிகளின் மிரட்டல்களுக்கும் பணியாமல் தவெகவின் தேசியக் கொள்கையில் அசைக்க முடியாத உறுதியோடு நிற்கிறார்.

9. கூட்டணிக் கட்சிகளைச் சுமக்கும் பலம்: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்கூட சொற்ப இடங்களையே வென்ற சூழலில், தமிழகத்தில் திமுகவின் தோளில் ஏறித்தான் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெற்றி பெற்றனர். ஆனால் விஜய், பிற கட்சிகளின் தயவின்றி தன் சொந்தக் கட்சியின் தோள்களிலேயே கூட்டணிக் கட்சிகளை வெற்றிபெற வைக்கும் வாக்கு வங்கியைத் தன்வசம் வைத்துள்ளார்.

10. எதிர்மறை பிம்பம் இல்லாத அரசியல்: இருபது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ராகுல் காந்தியின் மீது சுமத்தப்பட்ட அரசியல் பலவீனங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அவரால் இன்னும் முழுமையாக உடைக்க முடியவில்லை. சொந்த கட்சியின் கோஷ்டி மோதலை கூட நிறுத்த முடியாத வலிமையற்ற தலைவர்தான் ராகுல் காத்து. ஆனால் விஜய் அப்படி இல்லை. கட்சியை இரும்பு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். விஜய், தேசிய அரசியலுக்கு முற்றிலும் புதிய, நேர்மறையான, புத்துணர்ச்சியூட்டும் ஒரு தேசிய மாற்றாகக் களத்தில் நிற்கிறார்.

இந்தக் காரணங்களால்தான், ராகுல் காந்தியின் தலைமையை இனியும் நம்பிப் பயனில்லை என்று கருதும் நடுநிலை வாக்காளர்களும், பாஜகவுக்கு எதிரான வலுவான மாற்றுத் தலைவரைவிஜய்யை நோக்கித் தங்களது பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+