கோயம்பேட்டில் முதல்வர் விஜய்! வடபழனியில் சங்கீதாவும் திவ்யாவும் என்ன செய்றாங்க பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேட்டில் இலவச பேருந்து பயண திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ள நிலையில் அவரது மனைவி சங்கீதா, மகள் திவ்யா ஷாஷா, மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோர் வடபழனியில் இருக்கிறார்கள்.

மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுப்படுத்தி வெற்றிப் பயணம் என்ற திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

joseph vijay sigma

அரசு பேருந்துகளில் ஏறிய முதல்வர் விஜய், பேருந்துகளில் பயணித்த பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட்டை அவரே வழங்கினார். பின்னர் அங்கிருந்த பெண்கள், விஜய்க்கு சாக்லேட் கொடுத்தனர். அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

வெற்றி பயண திட்டம் மூலம் முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.

கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர், மலை பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் மாநகர, நகர்ப்பகுதி, புறநகர், சாதாரண பேருந்துகள், 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடுகளோ கிடையாது. இந்த சேவையில் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கலாம். இதை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ 6000 கோடி செலவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 7 அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69%), மொத்தம் 1,94,649 நடைகளில் , 1,65,312 நடைகள் (85%) இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளை தவிர தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, இன்றைய தினம் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு முதல் காட்சிக்காக தாய் சங்கீதா, தங்கை திவ்யா ஷாஷாவுடன் வடபழனியில் உள்ள கமலா தியேட்டருக்கு வந்துள்ளார்.

தனது கணவர் விஜய்க்கு வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் இதனால் தன்னை விலக்கி வைத்திருப்பதாகவும், தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தர வேண்டும் என்றும் சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த கேஸ் நடக்கும் போது போது இருவருமே வீடியோ காலில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். விவாகரத்து கொடுப்பதில் விஜய்க்கு விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு கேட்ட மனுவை சங்கீதா வாபஸ் பெற்றார். அவராகவே விவாகரத்து கோரினார், பின்னர் அவராகவே மனுவை திரும்பப் பெற்றார். இது ஏன் என தெரியவில்லை.

இந்த நிலையில் விஜய்யும் சங்கீதாவும் ஒன்று சேர்ந்து போயஸ் தோட்டத்தில் ஒரு வீடு வாங்கி அதில் வசிக்க போவதாக சொல்லப்பட்டது. அது போல் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற விஜய், அங்கு மனைவி சங்கீதாவை சந்திப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இதெல்லாம் நடக்கவில்லை. தற்போது சங்கீதா சென்னையில் இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+