இடைத்தேர்தல் நேரத்தில் விஜய் போட்ட கணக்கு: கேரளா விரையும் தமிழக அமைச்சர்கள் குழு! பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள முதல்வர் வி.டி.சதீசனை சந்தித்து விவாதிக்க தமிழக அமைச்சர் கள் குழுவை கேரளாவுக்கு நாளை 5-ந்தேதி அனுப்பி வைக்கிறார் முதல்வர் விஜய். இந்த குழுவில் தவெக அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், செங்கோ ட்டையன், அருண்ராஜ் மற்றும் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஸ் குமார் உள்பட உயரதிகாரிகள் பலரும் இடம் பெற்றுள்ளனர். ஆனைமலையார்-நல்லாறு திட்டம் குறித்து இந்த சந்திப்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கேரளா முதல்வரிடம் விவாதிக்கின்றனர்.

தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6-ந்தேதி நடக்கும் நிலையில், தமிழக அமைச்சர்களை கேரளாவுக்கு 5-ந்தேதி அனுப்பி வைப்பதில் தான் முதல்வர் விஜய்யின் அரசியல் இருக்கி றது என்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.

CM Vijay

கேரளப் பகுதியில் உற்பத்தியாகும் ஆனைமலையாறு நீர், யாருக்கும் பயன்படாமல் வீணாகிறது. அதனால் அந்த நீரை நல்லாறு வழியாகத் திருப்பி தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்திமலை அணைக்குக் கொண்டு வருவதே ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் ஆகும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆண்டுதோறும் சுமார் 8.5 முதல் 9 டி.எம்.சி நீர் திருமூர்த்தி அணைக்குக் கிடைக்கும். இதனால், திருப்பூர்-கோவை மாவட்ட விவசாயிகளின் நீர்ப்பாசண தேவைகள் பெருமளவு பூர்த்தியாகும்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் போல, இந்த ஆணைமலையார்-நல்லாறு திட்டமும் கொங்கு மண்டல விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக பல ஆண்டுகளாக திருப்பூர்-கோவை மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தை இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள், போராட்டங்கள் நடக்கும் போது அக்கறை காட்டியதை தவிர திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளை உடைத்து திட்டத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்ததில்லை.

இப்படி கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலமாக கிடப்பில் கிடக்கும் இந்த திட்டத்தை தவெக அரசு முன்னெடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பு கொங்கு மண்டல விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற இந்த 4 மாதங்களில் இத்திட்டம் குறித்து எந்த கவனமும் செலுத்ததாத முதல்வர் விஜய், தற்போது இத்திட்டம் குறித்து கேரள முதல்வரி டம் விவாதிக்க தமிழக அமைச்சர்கள் குழுவை அனுப்பி வைக்கிறார். இங்கு தான் அவரின் தேர்தல் வியூக அரசியல் இருக்கிறது என்கிறார்கள் தமிழக தேர்தல் வியூக வகுப்பாளர்களும் அரசியல் விமர்சகர்களும்.

அதாவது, இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் தொகுதி, திருப்பூர் மாவட்டத்தில் வருகிறது. இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வுக்கு ஏக எதிர்ப்புகள் இருக்கின்றன. பல இடங்களில் அவரால் வாக்கு சேகரிக்கக் கூட செல்ல முடியவில்லை. தாராபுரம் தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகம் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி. அதிமுகவின் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, கொங்கு வேளாள கவுண்டர் சமூகம். அந்த வகையில், அதிமுக இங்கு தோல்வி அடைந்தால், எடப்பாடி பழனிச்சாமியே அதாவது கொங்கு வேளாள கவுண்டர் சமூகமே தோற்றுப்போனதற்கு சமம். அதனால், தங்கள் சமூகத்தை சேர்ந்த தலைவர் தோற்றுப்போகக்கூடாது என அச்சமூகத்தினர் கருதுகின் றனர்.

உளவுத்துறை மூலம் இந்த சிந்தனையை அறிந்து கொண்ட முதல்வர் விஜய், தொகுதியில் உள்ள மற்ற சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளின் ஆதரவைப் பெற என்ன செய்யலாம் என ஆலோசகர்களிடமும் அதிகாரி களிடமும் விவாதித்த போது தான், 60 ஆண்டு காலமாக விவசாயிகள் போராடும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் குறித்த கோரிக்கை பற்றி விஜய்யிடம் சொல்லப்பட்டுள்ளது. அந்த திட்டம் நிறைவேறாமல் இருக்கும் சூழல்கள் குறித்தும் தடைகள் குறித்தும் விரிவாக எடுத்துச் சொல்லியுள்ளனர்.

இந்த கோரிக்கையில் தவெக அரசு அக்கறையாக இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கினால் ஒருவேளை விவசாயிகளின் கவனம் தாராபுரத்தில் தவெக பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் எடுத்துச் சொல்லியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முடிவானதுதான் கேரளா முதல்வரை தமிழக அமைச்சர்கள் சந்திக்கும் திட்டம். இதற்காக, கேரளா முதல்வர் சதீசனிடம் அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது.

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என கேரள அரசு சார்பில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவ்வளவு தூரம் தள்ள வேண்டாம். அக்டோபர் 5-ந்தேதி சந்திப்பு நடக்க முதல்வர் விஜய் விரும்புகிறார். அதற்கேற்ப கேரள முதல்வரின் நேரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என தவெக அரசு சார்பில் மென்மையாக அழுத்தம் தரப்பட்டிருக் கிறது. இதனையடுத்து, கேரள முதல்வர் ஓ.கே. சொல்லியிருக்கிறார். அந்த வகையில் நாளைக்கு இந்த சந்திப்பு நடக்கவிருக்கிறது.

இந்த சந்திப்பை பெரிதாக விளம்பரப்படுத்தவும் முடிவாகியிருக்கிறது. 6-ந்தேதி தேர்தல் நடக்கும் நிலையில், 5-ந்தேதி திருப்பூர் மாவட்ட விவசாயி களின் நீண்ட கால கோரிக்கையான இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் விஜய் அக்கறை கொண்டிருக்கிறார் என்கிற தோற்றத்தை வரவழைப்பது மட்டுமே இந்த சந்திப்பின் நோக்கம். ஆனால், தாராபுரம் விவசாயிகளிடம் விஜய் அரசின் இந்த தேர்தல் அரசியல் வியூகம் தாக்கத்தை ஏற்படுத்துமா ? என்பது மில்லியன் டாலர் கேள்விதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+