முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் அண்மையில் உயர்த்திய ரூ 25 லட்சம் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகின்றன என்பதை பார்க்கலாம்.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு தொகை ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 25 லட்சமாக உயர்த்துவதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

CM Vijay

இந்த திட்டத்தில் சேர வேண்டும் என்றால் அதற்கு தேவையான ஆவணங்களை பார்க்கலாம்.

ஆண்டு வருமானம் ரூ 1.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

விஏஓவிடம் இருந்து வருமான சான்றிதழ் தேவை

ஆதார் கார்டு, ரேஷன் கார்டு

இந்த அட்டையை பெறுவது எப்படி?

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு மருத்துவக் காப்பீடு அலுவலகத்தை அணுக வேண்டும். பிறகு விஏஓவிடம் வாங்கிய வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சரிபார்த்து பயோமெட்ரிக் சரிபார்ப்பு முடிந்த பிறகு அட்டை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம்

மனைவி, குழந்தைகள், குடும்பத் தலைவரின் பெற்றோர்

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் கட்டாயம் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.

எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை

அரசு மற்றும் தனியார் மருத்துவமனை

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பெற முடியாது

என்னென்ன சிகிச்சைகளுக்கு அனுமதி என்ற விவரத்தை மருத்துவமனையில் தெரிந்து கொள்ளலாம்.

https://www.cmchistn.com/ என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் நெட்வொர்க் ஆஸ்பிட்டல் பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.

காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதுகுறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்ததாவது: ஓர் உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கவே கூடாது.

அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை, எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. மருத்துவம் என்பது சலுகை அல்ல, ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை.

ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிகக் கொடியது. மருத்துவத்தைத் தேடி வரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழப்புணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசர கால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி, ஏழை பணக்காரர், கிராமம் நகரம் என்ற பாகுபாடின்றி, ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது நமது அரசு.

பெரம்பூரில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவை எளிதில் கிடைக்கும் வகையில் பெரம்பூரில் ரூ 300 கோடியில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு தற்போதுள்ள ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 25 லட்சமாக உயர்த்தப்படும்.

திருநங்கைகளுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்நை ஸ்டான்லி, நெல்லை, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+