விஜய்க்கு வெற்றி.. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது தவெக.. இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் இருந்து வந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தவெகவிற்கு இன்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதனால் தவெகவிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

cm-vijays-tvk-has-been-recognized-as-a-state-political-party-by-the-election-commission-of-india

தமிழக முதல்வர் விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்டது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டன.

இதில் எடப்பாடி தொகுதி வேட்பாளர் அருண் குமார் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் 233 தொகுதிகளில் தவெகவினர் போட்டியிட்டனர். இதில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதோடு, காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவில் ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக அங்கீகரித்துள்ளது. இதுவரை இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தவெக இருந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக செயல்பட உள்ளது.

பொதுவாக மாநில கட்சியாக அங்கீகாரம் பெற 5 முக்கிய நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இதில் முதல் நிபந்தனை என்பது சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளுடன் 2 எம்எல்ஏக்களை பெற வேண்டும். 2வது நிபந்தனை என்பது லோக்சபா தேர்தலில் 6 சதவீத ஓட்டுகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும். 3வது நிபந்தனை என்பது மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளில் 3 சதவீதத்தை கைப்பற்றி இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 3 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 4வது நிபந்தனை என்பது ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு 25 லோக்சபா தொகுதிகளுக்கும் (அல்லது அதன் பகுதியளவு எண்ணிக்கைக்கும்) ஒரு மக்களவைத் தொகுதியை வெல்ல வேண்டும். 5வது நபந்தனை என்பது லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்கள் இல்லாவிட்டாலும் கூட 8 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை ஒரு கட்சி பெறும்பட்சத்தில் அது இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும்.

ஆனால் தற்போது தவெக முதல் நிபந்தனையை பூர்த்தி செய்துள்ளது. சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளுடன் 2 எம்எல்ஏக்களை பெற்றால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறலாம் என்ற நிலையில் முதல்வர் விஜய்யின் தவெக சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 35.02 சதவீத ஓட்டுகள் பெற்று 108 எம்எல்ஏக்களை பெற்றது. இதனால் தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தவெகவிற்கு கிடைத்த அடுத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும்போது அதற்கு நிரந்தரமாக சின்னம் வழங்கப்படாது. இதனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்து தங்களுக்கான சின்னத்தை பெற வேண்டும். ஆனால் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டால் நிரந்தரமாக சின்னம் வழங்கப்படும். அந்த வகையில் தவெகவிற்கான சின்னம் விசில் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இனி சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் தவெக வேட்பாளர்கள் விசில் சின்னத்திலேயே போட்டியிட முடியும்.

அதுமட்டுமின்றி பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும்போது தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 20 என்ற அளவில் தான் வைத்திருக்க வேண்டும். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கும்போது தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கையை 40 வரை வைத்திருக்க முடியும். இதனால் தேர்தல் பிரசாரத்தை முக்கிய தலைவர்களை கொண்டு தீவிரமாக மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+