சி.எம்.டி.ஏ. அப்ரூவல்! முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி ஆக்ஷன்கள்! இனிமேல் தான் கச்சேரியே!
சென்னை: சென்னையில் இனி வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி கொடுப்பதில் அரசு வகுத்துள்ள வரைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை தீவிரமாக ஆராய்ந்தால் மட்டுமே அடுத்தடுத்த இயற்கை பேரிடர்களிலிருந்து தலைநகரை காக்க முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது.
CMDA என்பதன் விரிவாக்கம் Chennai Metropolitan Development Authority என்பதாகும். அதாவது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என்று கூடச் சொல்லலாம். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள லே அவுட்களுக்கு கட்டுமான அனுமதியை சி.எம்.டி.ஏ. தான் வழங்கி வருகிறது. அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் இருப்பின் மட்டுமே திட்ட வரைபடங்களுக்கு சி.எம்.டி.ஏ. அனுமதி வழங்கும்.

சி.எம்.டி.ஏ.விடம் அனுமதி கோரி சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மூன்று வகைப்படும். இதில் முதலாவது வகையான ஏ என்பது வீடு கட்டும் லே அவுட்களுக்கானது. இரண்டாவதாக உள்ள பி விண்ணப்பமானது ஏற்கனவே உள்ள கட்டிடத்தின் மேல் கூடுதலாக கட்டிடம் எழுப்புவதற்கானது. மூன்றாவது விண்ணப்பமாக சி தான் இதில் முக்கியமானது. அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான லே அவுட்களுக்கானது. திட்ட வரைபடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போதே சுற்றுச்சூழல் சார்ந்த சில விவரங்களையும், உறுதிமொழிகளையும் கொடுக்க வேண்டும்.
எல்லாம் சரி, வடிகால் பாதை உட்பட அரசின் எல்லா வரைமுறைகளையும் ஆராய்ந்து கள ஆய்வு செய்து அனுமதி கொடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதைத் தான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கள ஆய்வு நடத்தவும், களப்பணிக்கும் சி.எம்.டி.ஏ.வில் ஆட்கள் பற்றாகுறை உள்ளதாக நேற்றுக் கூட கூறியிருந்தார். சென்னையில் இந்தாண்டு இவ்வளவு பெரிய வெள்ளப் பாதிப்புக்கு காரணமே இஷ்டத்துக்கு அனுமதியை வாரி வழங்கியே என அன்புமணி தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
அன்புமணியின் இந்தக் குற்றச்சாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. வெள்ளப் பாதிப்பு சேதார விவரங்கள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு சி.எம்.டி.ஏ. நடவடிக்கைகளை தணிக்கை செய்து சில அதிரடி ஆக்ஷன்களை முதல்வர் எடுக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் வாரி வழங்கப்பட்ட திட்ட அனுமதிகள் குறித்த விவரமும் தூசு தட்டப்படும் எனத் தெரிகிறது.
சமூக வலைதளங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடியோ வெளியிடுபவர்கள் பலரும், சி.எம்.டி.ஏ. அப்ரூவல் இருந்ததால் தானே நாங்கள் நம்பி வீடு வாங்கினோம், அரசு விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் அனுமதி கொடுக்கப்படாமலேயே இருந்திருக்கலாமே என மனம் நொந்து கூறுவதும் முதல்வர் கவனத்திற்கு சென்றிருக்கிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications