வேளச்சேரி, முடிச்சூர் உள்பட 13 ஏரிகள் குறித்து பிரபல நாளிதழில் வெளியான செய்திக்கு சிஎம்டிஏ மறுப்பு
சென்னை: தமிழ்நாட்டின் பிரபல தனியார் நாளிதழில் 01.03.2025 அன்று, வெளியான "ரூ.250 கோடி ஒதுக்கியும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா? துார் வாரப்படாத 13 ஏரிகள்; சில இடங்களில் அரைகுறை" என்ற தலைப்பில் வந்த செய்திக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மறுப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாக்கம், வேளச்சேரி, முடிச்சூர், புழல், ரெட்டேரி, அயனம்பாக்கம், கொளத்தூர் மற்றும் சீக்கானன் ஏரியில் பணிகள் எப்போது முடியும் என்றும் சிஎம்டிஏ விளக்கம் அளித்துள்ளது.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "01.03.2025 அன்று பிரபல நாளிதழில் "ரூ.250 கோடி ஒதுக்கியும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா? துார் வாரப்படாத 13 ஏரிகள்: சில இடங்களில் அரைகுறை" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். 2022-23 சட்டசபை கூட்டத்தொடரில், மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) அமைச்சர் அறிவித்ததின்படி, ஏரிக்கரைகள் மற்றும் நீர்நிலையோர மேம்பாட்டு திட்டங்கள் 5100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

இதன் ஒரு பகுதியாக, நகர்ப்புற நீர்நிலைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக முக்கிய ஏரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன: 1) பெரும்பாக்கம், 2) ரெட்டேரி, 3) முடிச்சூர், 4) மாடம்பாக்கம், 5) செம்பாக்கம், 6) அயனம்பாக்கம், 7) வேளச்சேரி, 8) ஆடம்பாக்கம், 9) புழல். இந்த ஏரிகள் நீர் வளத்துறை (WRD). பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) (கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்) மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாய்வு செய்த பிறகு தேர்வு செய்யப்பட்டது. இதனுடன் கொளத்தூர் ஏரியையும் நீர்வளத்துறை (WRD) பரிந்துரைத்துள்ளது, மேலும் இது ஏரிக்கரை மேம்படுத்தும் (ake front development) திட்டத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நகர்ப்புற ஏரிகளின் மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்துதல், நிலையான நகர்ப்புற திட்டமிடலில் முக்கியப் பங்காற்றுகிறது. இது நிலத்தடி நீர் வளத்தை அதிகரிப்பதுடன், இயற்கையான வெள்ள நிவாரணி பகுதிகளாக செயல்பட்டு, சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது. இந்த முயற்சி, இந்த நீர்நிலைகளை அவைகளின் பழைய நிலைக்கு மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், அவற்றின் சுற்றுச்சூழல் மற்றும் தனித்துவமான கலாச்சார தன்மைகளை கொண்டாடும் வகையில் உயிரோட்டமுள்ள பொது இடங்களாக உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நீல-பசுமை உள்கட்டமைப்பை (blue- green infrastructure) அமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த திட்டம் நகர்ப்புற வளர்ச்சியை சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் ஒன்றிணைக்கும் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதன் மூலம் மீள்தன்மை கொண்ட, வசதியான நகரங்களை உருவாக்கும் முயற்சியில் இது முக்கியமான பங்காற்றுகிறது.
ஒவ்வொரு ஏரிக்கரை மேம்படுத்தும் திட்டமும் (lakefront development), ஸ்பான்ஜ் பூங்காக்கள் (Sponge Parks) (மழைநீர் சேகரிப்பு தொட்டியுடன் கூடிய குட்டைகளாக அமைக்கப்படும் பூங்காக்கள்) மற்றும் ஏரி மறுசீரமைப்பு கொள்கைகளை உள்ளடக்கிய வகையில் கவனமாக திட்டமிடப்பட்டுள்ளது, இது நீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மீள்தன்மை ஆகியவற்றிற்கான முழுமையான அணுகுமுறையை உறுதி செய்கிறது.
i) பெரும்பாக்கம், ii) வேளச்சேரி, iii) முடிச்சூர், iv) புழல், v) ரெட்டேரி, vi) அயனம்பாக்கம் vii) கொளத்தூர் & viii) சீக்கானன் ஏரி போன்ற பின்வரும் ஏரிகளில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் அக்டோபர் 2025க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதம்பாக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் மட்டும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (Modular STPs) அமைப்பதற்காக நீர்வளத் துறையுடன் (WRD) இணைந்து இடம் இறுதி செய்யப்பட்டு வருகிறது. மேற்கூறியவை தவிர, 2 ஏரிகளுக்கு (பெருங்குடி & போரூர்) ஏரிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கும் பணிக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நீர்நிலைகளைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் தொலைநோக்குப் பார்வையுடன்; சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இவை அணைகளை வலுப்படுத்துதல், கழிவுநீர் வெளியேற்றங்களை அடைத்தல், திடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் அனைவருக்கும் அணுகக்கூடிய பொது இடங்களை உருவாக்குதல் போன்ற முக்கிய தலையீடுகளை ஒருங்கிணைக்கின்றன. இந்த முயற்சிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமூக ஈடுபாட்டுடன் ஒத்திசைத்து, ஏரிகளை செழிப்பான நீல-பச்சை நகர்ப்புற சொத்துக்களாக (blue. green urban assets) மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுதிபூண்டுள்ளது, இந்த முயற்சிகள் அவற்றின் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நகர்ப்புற மீள்தன்மை மற்றும் வாழ்வாதாரத்திற்கு பங்களிக்கும் அணுகக்கூடிய மற்றும் உயிரோட்டமுள்ள பொது உங்களை உருவாக்குவதையும் உறுதி செய்கிறது. இந்த உண்மைகளுக்கு முரணான அல்லது எந்தவொரு தவறான தகவலும், இந்த ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பிற்கான முக்கியமான முன்னேற்றத்தை அவமதிக்கக்கூடியதாக இருக்கும்.
எனவே, பிரபல நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் விளக்கத்தை முழுமையாக பதிவு செய்யாமல் முழுமையற்ற செய்தி வெளியிடப்பட்டிருப்பது முற்றிலும் வருந்தத்தக்கது" இவ்வாறு சிஎம்டிஏ வெளியிட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications