செம பிளான்.. இடம் மாறும் ஆம்னி பஸ் நிலையம்.. எங்கே வரப்போகுதாம் தெரியுமா? வெளியான முக்கிய அப்டேட்
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையம் உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த தனியார் பேருந்து நிலையத்தை சென்னை வெளி வட்ட சாலைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டுள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. அதுவும் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் பயணிப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கும். திட்டமிட்ட நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விட்டால் அதற்காக பெருமை பட்டுக்கொள்ளும் அளவுக்கு சென்னையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி நிறைவடைந்து விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம். கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமையும் புதிய புறநகர் பேருந்து முனையத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதி பெயரிலான இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கத்தில் அமைய இருக்கும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். இதனால் நகரத்திற்குள் பயணிகள் நெரிசலில் பயணித்து கோயம்பேடு வருவது தவிர்க்கப்படும். அடுத்த மாதம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
இந்த பேருந்து நிலையம் பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தையும் சென்னை வெளி வட்ட சாலைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் திட்டமிட்டுள்ளது. தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு தற்போது தனியாக பேருந்து நிலையம் உள்ளது.
இங்கு போதிய வசதிகள் இல்லை என்ற ஆதங்கம் பயணிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் தரப்பிலும் உள்ளது. அதுவும் பண்டிகை காலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் ஆம்னி பேருந்துகள் சிக்குவதுண்டு. ஆம்னி பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் ஒருபக்கம் வாகன ஓட்டிகள் பக்கம் குறைகூறப்படும் நிலையில் தான் ஆம்னி பேருந்து நிலையத்தை சென்னை நகருக்கு வெளியே அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது.
கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய பேருந்து முனையத்தில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து நிலையம அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 100 பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் பேருந்து நிலையமும் சென்னை புறநகருக்கு செல்லும் பட்ச்சத்தில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications