தமிழக முதல்வரின் அலுவலக இன்ஸ்டா பக்கத்தில் ஒரே நாளில் நடந்த அதிசயம்! மிரள வைத்த பாலோயர்ஸ் எண்ணிக்கை
சென்னை: தமிழக முதல்வருக்கு என 'சிஎம்ஓதமிழ்நாடு' என்ற பெயரில் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தள பக்கம் உள்ளது. இதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை பாலோ செய்தவர்கள் எண்ணிக்கை 4.1 லட்சமாக இருந்தது. தற்போது விஜய் முதல்வராக பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் இது 1 மில்லியனாக (10 லட்சம்) அதிகரித்துள்ளது. நேற்று இரவு 12 மணிக்குள் இந்த எண்ணிக்கை 1.4 மில்லியன் (14 லட்சம்) பாலோயர்களாக அதிகரித்துள்ளது.
தமிழக முதல்வருக்கு என 'சிஎம்ஓதமிழ்நாடு' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தள பக்கம் உள்ளது. இந்த பக்கத்தில் முதல்வரின் நடவடிக்கைகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் தலைவர்கள் சந்திப்பு, அரசு திட்டங்கள் தொடங்கி வைப்பு, அரசு நலத்திட்ட அடிக்கல் நாட்டு விழா போன்ற பல்வேறு அரசு சார்ந்த பதிவுகள் பொதுமக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்படும்.

விஜய் பதவியேற்றதும் நடந்த மாற்றம்
தமிழகத்தின் 17வது சட்டமன்றத்தின் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் நேற்று முன் தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து 'சிஎம்ஓதமிழ்நாடு' என்ற எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய்யின் புகைப்படம் மற்றும் அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த புகைப்படங்களை வைக்கப்பட்டது. அதாவது முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் படங்கள் மாற்றப்பட்டு புரொபைல் படமாக விஜய்யின் படங்கள் வைக்கப்பட்டன.
முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு இந்த சமூக வலைத்தள பக்கத்தில் விஜய்யின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டன. விஜய்யின் படங்களை பதிவிடுவதற்கு முன்பாக இந்த டிவிட்டர் கணக்கை 4 லட்சம் பாலோயர்கள் பாலோ செய்து இருந்தனர். விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையானது பலமடங்கு உயர்ந்தது. 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் பாலோயர்களாக இந்த எண்ணிக்கை உயர்ந்தது.
பாலோயர்கள் அதிகரிப்பு
நேற்று இரவு 12 மணிக்குள் இந்த பாலோயர்களின் எண்ணிக்கையானது 1.4 மில்லியனை (14 லட்சம்) தாண்டியது. இதேபோன்று ட்விட்டர் பக்கத்திலும் பாலோயர்களின் எண்ணிக்கையானது 21 லட்சத்தை தாண்டியுள்ளது. விஜய் முதல்வராக பதவியேற்றது, பின்னர் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தது, அதற்கு பிறகு வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்றது உள்ளிட்ட படங்களும் இதில் பதிவிடப்பட்டன.

நேற்றும் தமிழக சட்டமன்றத்தில் விஜய் எம்.எல்.ஏவாக பதவியேற்றது, அதன்பிறகு தமிழக முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தது வரையிலான படங்களும் இந்த சமூக வலைத்தள பக்கமான சி.எம்.ஓ தமிழ்நாடு பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
லைக்ஸ்களையும் அள்ளியது
பாலோயர்கள் கூடிய அதே நேரத்தில் இதில் பதிவிடப்பட்டுள்ள ஒவ்வொரு போஸ்டும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. குறிப்பாக விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்த புகைப்பட பதிவிற்கு மட்டும் ட்விட்டரில் 1.22 லட்சம் பேர் லைக்ஸ் போட்டிருந்தனர்.
விஜய் இதற்கு முன்பாகவே எக்ஸ் தளத்தில் ஆக்டர் விஜய் என்ற பெயரில் கணக்கு வைத்துள்ளார். அப்போது தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் அப்டேட் குறித்து அந்த பக்கத்திலேயே போஸ்ட் பதிவிடுவார். அப்போதே அவரது ட்விட்டர் பக்கம் பல ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை பெறும். பின்னர் விஜய் தவெக என்ற கட்சியை ஆரம்பித்த பிறகு அதற்கென ஒரு எக்ஸ் தள பக்கத்தை தொடங்கி அதிலேயே கட்சி சார்ந்த பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அறிக்கைகள், வாழ்த்துக்கள் உள்ளிட்டவற்றை இந்த எக்ஸ் தள பக்கத்திலேயே பதிவு செய்து வருகிறார். இதேபோன்று இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விஜய் போஸ்ட்கள் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications