சிஸ்டர்னு சொல்லி அண்ணாமலை கீழ்தர செயல்.. இப்படி ஒரு அரசியல்வாதிய பார்த்ததில்ல -பத்திரிகையாளர் சங்கம்
சென்னை: கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரை கேமரா முன் வர சொன்ன தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஊடக நிறுவனங்கள் இனியும் மௌனம் காக்காமல் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் (01.02.2023) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது "மாநிலத் தலைவராக இல்லை என்றால் பாஜகவில் தொடர்ந்து செயல்பட வாய்ப்பிருக்கிறதா?" என்ற கேள்வியை பெண் பத்திரிகையாளர் ஒருவர் முன்வைத்தார்.
உடனே அந்த பெண் பத்திரிகையாளரை, தனக்கு அருகில் வந்து நிற்கும் படி அழைத்ததன் மூலம் தரம் கெட்ட, கீழ்த்தரமான, மூன்றாம்தர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் அண்ணாமலை. இந்த கேள்வி எந்த வகையிலும் அறம் தவறிய கேள்வியோ, ஒரு தனி நபரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த கேள்வியோ, ஒரு அரசியல் கட்சித் தலைவரின் குடும்ப விவகாரம் தொடர்பான கேள்வியோ, கேட்கவே கூடாத அல்லது கேட்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத கேள்வியோ கிடையாது.
அண்ணாமலை பாஜகவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது தொடங்கியே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடங்கி, கட்சியின் மூத்த தலைவர்களையும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் மதிக்காமல் செயல்படுகிறார் என்றும், கொடூரமான குற்றப் பின்னணியைக் கொண்டவர்களை கட்சியில் சேர்க்கிறார் என்றும், பெண்களை பயன்படுத்தி கட்சியில் தனது பொறுப்பை காப்பாற்றிக் கொள்கிறார் என்பது வரையிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் அவ்வப்போது உலவி வந்துள்ளது. இந்நிலையில், அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை அளந்துவிட்ட பொய், அதிமுகவை கோபப்படுத்தியதும், அதைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதையும் நாம் அறிவோம்.
ஆகவே, அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால், அவர் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி மீண்டும் அரசியல் வட்டாரத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தனது நடைபயணத்திற்கு இடையில் அண்ணாமலை டெல்லி புறப்பட்டுள்ளார்.
ஆகவே, இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டால் கட்சியில் நீடிப்பீர்களா என்ற கேள்வியை அண்ணாமலையிடம் கேட்பது எந்த வகையிலும் நெறி தவறிய அல்லது தொடர்பற்ற கேள்வியாக கருத முடியாது. ஆகவே, அந்த பெண் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வியில் எந்த தவறும் இல்லை. அது மிக மிக சரியான ஒரு கேள்வியே.
அண்ணாமலையை பொறுத்தவரை, பத்திரிகையாளர்கள் எழுப்பும் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வசமாக சிக்கிக்கொள்ளும் பட்சத்தில் அதை எவ்வாறு சமாளிப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி "நீங்கள் எந்த பத்திரிகையை சேர்ந்தவர்? உங்கள் பெயர் என்ன? உங்களுக்கு கேள்வி கேட்க தெரியவில்லை" என்பது போன்ற தரம்கெட்ட செயலில் ஈடுபட்டு தப்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை பார்த்துள்ளது. ஆனால், பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு கூட பதில் சொல்லத் தெரியாமல், இப்படி மூன்றாம் தர நடவடிக்கையில் ஈடுபட்ட எந்த ஒரு தலைவரையும் தமிழ்நாடு இதற்கு முன் சந்தித்ததில்லை.
பாஜக கட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக "உங்களைப் போல் ஒரு அரசியல்வாதியை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை" என்று அண்ணாமலையிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளோம். ஆனாலும், அண்ணாமலை திருந்தவில்லை.
அதே சமயத்தில், பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் அண்ணாமலையை ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications