இதெல்லாம் லிஸ்டுலேயே இல்லையே.. மேலே மின்சார ரயில்.. கீழே மெட்ரோ.. சென்னையை துளைத்து எடுத்த கல்வராயன்
சென்னை: சென்னையில் பெரம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைப்பதற்காக ஏற்கனவே உள்ள மின்சார ரயில் உள்ள பாதைக்கு கீழே சுரங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த ரூட்டில் மார்ச் மாதத்தில் ஏறக்குறைய ஆறு நாட்களுக்கு தொடர் பணிகள் செய்யப்பட்டு சுரங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. அந்த நாட்களில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யும் மக்கள் பெரம்பூரைக் கடக்கும்போது ரயில் மெதுவாக செல்வதை உணர்ந்திருப்பார்கள்.

அதற்குக் காரணம் CMRL இன் டன்னல் போரிங் மெஷின் 'கல்வராயன்' பூமிக்கு அடியில் தோண்டியதால், பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு இருந்தது. 20 கி.மீ. கொண்ட இந்த மொத்த சுரங்க பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அயனாவரத்தில் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் டிபிஎம் பெரம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தை சுரங்கம் வந்தடைந்தது.
காவிரி பணிகள்: இன்னொரு பக்கம் மெட்ரோ ரயில் பணிக்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் இயந்திரம் (டிபிஎம்) மொத்தமாக பணிகளை முடித்துள்ளது. ஆற்றின் முழுப்பகுதியிலும் இந்த இயந்திரம் சுரங்கம் தோண்டி உள்ளது.
காவிரி என்ற இந்த பெயர் கொண்ட இயந்திரம் விரைவில் முழுமையாக சுரங்கம் தோண்டி முடிக்கும். இயந்திரம் மார்ச் மாதத்தில் சேத்பேட் ஏரிக்கு கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்க உள்ளது. சென்னை மெட்ரோ ரெயிலின் கட்டம்-2 இன் 3-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதைகள் மாதவரம் பால் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம்-3-இல் ஒப்பந்தம் TU02 (கெல்லிஸ்முதல் தரமணி வரை) சுரங்கப்பாதை கட்டுமான பணிகள், 16.02.2023 அன்று தொடங்கியது. "காவிரி" மற்றும் "அடையாறு" என இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கிரீன்வேஸ் சாலை நிலையத்திலிருந்துஅடையாறு சந்திப்பு நிலையம் வரை 1.226 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.
இதில் "காவிரி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் 583 மீ. சுரங்கம் தோண்டும் பணியை முடித்து தற்போது வெற்றிகரமாக அடையாறு ஆற்றில் நுழைந்து அடியில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. "அடையாறு" சுரங்கம் தோண்டும் இயந்திரம், 250 மீ. தொலைவில் நெருக்கமாகப் பின் தொடர்ந்து 20 நாட்களுக்குள் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கும். இந்த இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திரு.வி.க. பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையார் சந்திப்பு நிலையத்தை வந்தைடையும்.
சென்னை மெட்ரோ: இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமைபொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னைமெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்த்தனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமைபொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தற்போது 54.6 கி.மீ. நீளத்தில், நீல வழித்தடத்தில் விமானநிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ வரை மற்றும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரைமெட்ரோ இரயில் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
. மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.
இதன் காரணமாக சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் மட்டும் மெட்ரோவில் 87 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 2.8 லட்சத்தை தாண்டி உள்ளது.












Click it and Unblock the Notifications