லேட் நைட்டில் பஸ் புக் பண்ணி இருக்கீங்களா! கவலை வேண்டாம்.. சென்னை மெட்ரோ எடுத்த வேற லெவல் முடிவு
சென்னை: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சென்னைவாசிகள் ஊருக்கு கிளம்ப ரெடியாகிவிட்டனர். இதற்கிடையே தீபாவளிக்கு ஊருக்குச் செல்வோரைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ளது.
தீபாவளிக்குச் சென்னையில் வாழும் பிற மாநில மக்கள் எளிதாகச் சொந்த ஊர் செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், சிறப்பு ரயில்கள், சிறப்புப் பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ: இதுபோன்ற நாட்களில் சாலைகளில் டிராபிக் உச்சத்தில் இருக்கும் இதனால் நகரில் தேவையான இடங்களுக்குச் செல்ல மெட்ரோ சிறந்த ஆப்ஷனாக இருக்கும். அதேநேரம் இரவு 11 மணி வரை மட்டுமே மெட்ரோ இருக்கும் என்பதால் லேட் நைட்டில் ஊருக்கு செல்வோருக்கு இது சிரமத்தைத் தருவதாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிஎம்ஆர்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிக்காக நாளை 30.10.2024 (புதன்கிழமை) மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் அட்டவணையின் படி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயில் சேவை: காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 12 மணிக்குப் புறப்படும்).
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை: பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 12 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்
தீபாவளி அட்டவணை: 31.10.2024 (வியாழக்கிழமை) மற்றும் 01.11.2024 (வெள்ளிக்கிழமை) மெட்ரோ இரயில்கள் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயங்கும்.. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications