"விவசாய லோன்".. கடைசியில் ஸ்டாலினுக்கு வந்து சேர்ந்த "நன்றி"..!
விவசாயிகள் சங்கம் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ளது
சென்னை: விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்..!
இந்த முறை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வீரியத்துடன் திமுக களம் இறங்கி உள்ளது.. அதனால் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் கடனை ரத்து செய்யும்படி விவசாயிகள் சொல்லி கொண்டே இருந்தனர்..

இந்த கடன் மட்டும் கோடிக்கணக்கான ரூபாயில் இருப்பதால் விழி பிதுங்கி இருக்கும் மக்களுக்கு, நம்பிக்கை வார்த்தைகளை ஸ்டாலினும் தந்திருந்தார்..
இந்நிலையில், கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் ரூ 12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக பேரவையில் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் வரவேற்புகள், பாராட்டுக்கள் வந்தாலும், திமுகவின் அறிவிப்பு மற்றும் தேர்தலை மனசில் வைத்து கொண்டுதான் தமிழக அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நேரத்தில்தான், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவானது, திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளது..
இதை பற்றி அவர்கள் சொல்லும்போது, "இன்னும் சில மாதங்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய கடன் தள்ளுபடி பலன், ஸ்டாலினின் அறிவிப்பால்தான் உடனடியாக கிடைத்திருக்கிறது... அதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களால் பலன் அடைந்திருக்கிறார்கள். அதற்காக தமிழக விவசாயிகளின் சார்பில் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளது.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications