தேங்காய் விலை எகிறுது.. ரூ.25-ல் இருந்து ரூ.52.. அடுத்து ரூ.70ஆ? தோப்பிலேயே விவசாயிகள் போட்ட பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேங்காய் வாங்க போகிறவர்களுக்கு இனி விலை இன்னும் எவ்வளவு உயருமோ என்ற கவலை.. விவசாயிகளுக்கோ இப்போதே விற்றுவிடலாமா, இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கலாமா என்ற யோசனை.. காரணம், தேங்காய் விளைச்சல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஏற்றுமதி சந்தையிலும் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ரூ.25 ஆக இருந்த தேங்காய், இப்போது ரூ.52 முதல் ரூ.70 வரை விலை பேசும் நிலைக்கு வந்துவிட்டது...!!!

சமீப காலமாகவே தேங்காய் விலை உயர்ந்தபடியே உள்ளது.. கடுமையான வெயில், தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விளைச்சல் ஏற்கனவே குறைந்துள்ளது. இதோடு வறண்ட வானிலை தொடர்ந்து நீடிப்பதாலும், ஏராளமான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாலும், வரும் நாட்களில் விளைச்சல் மேலும் குறையும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Coconut Price Rises

தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கும் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போதுமான மழை இல்லாததால் உற்பத்தி குறைந்திருப்பதாக வர்த்தகர்களும் தெரிவிக்கிறார்கள்.. இதன் விளைவாக ஏற்றுமதிக்கு தேவையான தரமான தேங்காய்களையே போதுமான அளவு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேங்காய் விலை உயர போகிறது

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய் கிலோ ரூ.52 வரை விற்பனையாகிறது. ஒரு டன் தேங்காய் ரூ.52 ஆயிரம் வரை விலை போகிறது. இந்த விலை விரைவில் கிலோ ரூ.70-ஐ எட்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கு முன்பு, 2 வருஷத்துக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் சராசரியாக ரூ.25-க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.40 முதல் ரூ.45 வரை விலை இருந்தது. வழக்கமாக தேங்காய் ஏற்றுமதி விலை ரூ.25 முதல் ரூ.30-க்குள் இருந்த நிலையில், சமீபத்தில் ரூ.55 முதல் ரூ.70 வரை உயர்ந்தது. அதாவது பழைய நிலவரத்துடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி விலை சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது. தேங்காய் விலை உயர்ந்ததால் ஏற்றுமதி செலவும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே மேற்காசிய நாடுகளில் நிலவிய போர் பதற்றம் குறைந்த பிறகு, தேங்காய் ஏற்றுமதி தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த தேங்காய் ஏற்றுமதியில் தமிழகம் 31 சதவீத பங்களிப்புடன் முதல் இடத்தில் உள்ளது.

துபாய், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி

தமிழகத்தில் இருந்து கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஏமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கடுத்து சிங்கப்பூருக்கும் அனுப்பப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தேங்காய்க்கும் குறிப்பிட்ட தரம் இருக்கிறது. ஒரு தேங்காய் 13 அங்குல சுற்றளவும், 400 முதல் 500 கிராம் எடையும் கொண்டிருக்க வேண்டும். ஒரு மூட்டையில் 13 கிலோ அல்லது 25 தேங்காய்கள் இடம்பெறும். ஒரு கன்டெய்னரில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் தேங்காய்கள் வரை அனுப்பப்படுகின்றன.

திருப்பூர் தேங்காய்கள்

இந்த ஏற்றுமதிக்கான தேங்காய்கள் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால் உற்பத்தி குறைந்துள்ளதால் இந்த தரமான தேங்காய்களை வாங்குவதிலேயே தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.. பறித்த தேங்காய்களை உடனடியாக விற்பனை செய்யாமல், விளைநிலங்களிலேயே குவித்து வைத்து இருப்பு வைத்து விடுகிறார்கள்.. இதற்கு தனியாக பெரிய செலவும் செய்ய வேண்டியதில்லை. தோப்பிலேயே தேங்காய்களை குவித்து வைக்க முடியும். எனவே விலை மேலும் உயர்ந்த பிறகு விற்பனை செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் தேங்காய்களை இருப்பு வைத்து வருகின்றனர்.

தேவை அதிகம் + விளைச்சல் குறைவு

ஒருபக்கம் ஏற்றுமதி தேவை அதிகரிக்கிறது.. மறுபக்கம் வெயில், தண்ணீர் பற்றாக்குறை, மழையின்மை, நோய் தாக்குதல் என விளைச்சல் குறைகிறது. இதனால் தேங்காய் விலை அடுத்ததாக எங்கே போய் நிற்கும் என்பதுதான் இப்போது விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மொத்த்தில் தேங்காய் விலை இன்னும் உயர போகிறது போலும்.. ஆனால், எங்கே எப்போது போகிறது என்ற கேள்விதான் விவசாயிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+