ஏராளமான காலியிடங்கள்.. காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 14ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

cognizant-hiring-for-multiple-position-role-and-interview-to-be-held-on-june-14

அந்த வகையில் தற்போது காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் தற்போது MegaWalkin for Multiple Position என்ற பெயரில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. பிரத்யேகமாக இந்த பணிக்கு தான் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணியை விரும்புவோர் ஐடி துறையில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஸ்கில்செட்டாக Databricks, Snowflake, Abinitio ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Face to Face முறையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ஜூன் 14ம் தேதி Cognizant Technology Solutions, Infopark Phase 2, Kakkanad, Kochi, Kerala 682030 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். நோட்டீஸ் பீரியடாக 0 - 90 நாட்கள் வழங்கப்படுகிறது.

இது PAN India வேலையாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் நம் நாட்டில் எந்த நகரில் வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோவையிலும் காக்னிசண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை, கோவையிலும் பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+