பிரபல ஐடி நிறுவனமான சென்னை துரைப்பாக்கம் காக்னிசன்ட் தலைமை அலுவலகம் விற்பனைக்கு! ஏன் என்னாச்சு?
சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட்டின் சென்னை தலைமை அலுவலகத்தை விற்பனையை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள காக்னிசன்ட் நிறுவனங்களுக்கெல்லாம் தலைமை அலுவலகமாக சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அலுவலகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது.
பிரசித்தி பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் காக்னிசன்ட். உலக அளவில் இந்த நிறுவனத்திற்கு நியூ ஜெர்சி தலைமையிடமாக உள்ளது. அது போல் இந்தியாவின் தலைமையகம் சென்னை ஆகும். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒக்கியம் துரைப்பாக்கத்தில் காக்னிசன்ட்டுக்கான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சென்னை, பெங்களூர், கோயமுத்தூர், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, கொச்சி ஆகிய இடங்களில் உள்ளன.

அது போல் சீனாவின் ஷாங்காய், ஆம்ஸ்ட்ர்டாமிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வங்கிச் சேவை, மருத்துவம், தொலைத்தொடர்பு, காப்பீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைகளை காக்னிசன்ட் வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக 40 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் ஓஎம்ஆர் சாலையில் இயங்கி வரும் காக்னிசன்டின் தலைமை அலுவலகம் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 15 ஏக்கர் நிலம், 4 லட்சம் சதுர அடியில் அலுவலக கட்டடம் என சென்னையின் ஐடி காரிடாராக விளங்கும் காக்னிசன்ட் , ரூ 750 கோடி முதல் ரூ 800 கோடி வரை விற்பனை ஆகும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தோராயாமாக மதிப்பீடு செய்துள்ளன.
காக்னிசன்டின் ஆலோசனை குழு, பாஷ்யம் மற்றும் காசாகிராண்ட் ஆகிய இரு கட்டுமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில் இன்னும் எந்த நிறுவனம், காக்னிசன்ட்டை வாங்க போகிறது என்பது குறித்து இறுதி செய்யப்படவில்லை. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் துரைப்பாக்கம் அலுவலகத்தை காலி செய்வார்கள் என சொல்லப்படுகிறது.
அதன் பிறகு ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் அருகே மெப்ஸ் வளாகத்தில் புதிய அலுவலகத்தில் காக்னிசன்ட் நிறுவனம் செயல்படலாம் என தெரிகிறது. ஏற்கெனவே மெப்ஸ், சோளிங்கநல்லூர் மற்றும் சிறுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களை ஒன்றாக்கவே துரைப்பாக்கம் அலுவலகத்தை விற்பனைக்கு கொடுப்பதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications