ஆட்டின் கழுத்தில் தொங்கிய அண்ணாமலையின் போட்டோ.. நடுரோட்டில் நடந்த சம்பவம்.. இடிந்துபோன தமிழக பாஜக
சென்னை: தமிழக பாஜக சம்பந்தமாக, 2 விதமான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.
கோவை தொகுதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விட, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.. இதனை திமுகவினர் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு இடங்களில் ஆட்டுக்கறி பிரியாணியை வழங்கி கொண்டாடி வருகின்றனர்...

அந்தவகையில், கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாமலையின் தோல்வி மற்றும் பாஜகவின் தோல்வியைக் கொண்டாடும் விதமாக ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வைத்து கொண்டாடினார்கள்.
மட்டன் பிரியாணி: இதுகுறித்து தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.. அப்போது, "திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆட்டை நோகாமல் அறுக்க வேண்டும் என்று ஆட்டை வதம் செய்கின்ற தன்மையில் அண்ணாமலை பேசி வந்தார்.. இப்போது படுதோல்வியை சந்தித்துள்ளார். ஆனால், இந்தியா கூட்டணிக்கு திமுகவிற்கு 40க்கு 40 வழங்கியிருக்கிறார். இதனை கொண்டாடுகின்ற வகையில் ஆட்டுக்கறி பிரியாணியோடு இந்த விருந்தை நடத்துகிறோம்" என்று கூறியிருந்தார்.
அதேபோல, கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் தங்கள வெற்றியை கொண்டாடினார்கள்.. அப்போது திரண்டு வந்த திமுகவினர், அங்கு 2 ஆடுகளை கயிற்றால் கட்டி வைத்து பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கினார்கள்.
பலியிட்ட ஆடு: இப்படிப்பட்ட அண்ணாமலையின் போட்டோவுடன் ஆட்டை நடுரோட்டில் பலியிட்ட வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது.. அண்ணாமலை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் அவரது போட்டோவை, ஆட்டின் கழுத்தில் கட்டி மர்மநபர்கள் பலியிட்டிருக்கிறார்கள். அப்போது அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் எங்கே? எப்போது? நடைபெற்றது என்பது தெரியவில்லை.. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஜகவினர், இந்த பயங்கர செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
மீசை மழிப்பு: அதேபோல, அண்ணாமலை கோவையில் தோல்வியை தழுவினால் மொட்டை அடித்து மீசையை மழிப்பேன் என்று சொன்ன பாஜக நிர்வாகி, நடுரோட்டில் உட்கார்ந்து மொட்டை அடித்து மீசையை மழித்தார்.. இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாக, பாஜகவினருக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
மொத்த பார்முலாவையே மாற்றும் அண்ணாமலை.. இதுவரை இல்லாத புதிய திட்டத்தை கையில் எடுக்கிறாரே.. செம -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள்












Click it and Unblock the Notifications