அதிமுக ஓட்டுகள் திமுகவுக்கு விழுந்ததா? அப்ப பாஜக? கோவை புள்ளிவிவரம் சரியா? கொந்தளித்த பிடிஆர்?
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் அந்தக் கட்சி 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
அதேபோல மாநிலத்தில் 2வது மிகப்பெரிய கட்சி பாஜகதான். நாங்கள்தான் தமிழ்நாட்டில் உண்மையாக எதிர்க்கட்சி எனக் கடந்த ஒரு ஆண்டு மேலாக அண்ணாமலை பேசி வந்தார். அப்படியான சூழலில் அந்தக் கட்சி 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.

இதில் கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை 4 லட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். இவரது தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 2,36,490 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக குறைந்தது 18 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று ஒரு தனியார் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பை வெளியிட்டது. ஆனால், இந்தக் கட்சியின் மாநிலத் தலைவரே தோல்வியை தழுவி இருந்தார்.
ஆக, கருத்துக் கணிப்புகள் என்பது கருத்து திணிப்பு என எதிர்க்கட்சிகள் கூறி வந்தது உண்மை என நிரூபணமாகி உள்ளது. தேசிய அளவில் கூட பாஜக 350 இடங்களைக் கைப்பற்றும் எனத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின. அதுவும் பொய்யானது.

இந்நிலையில் அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதியில் அதிமுக வாக்குகள் அதிக அளவில் திமுகவுக்கு விழுந்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று அதற்கான தரவுகளைக் காட்டி கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதாவது பல்லடம் தொகுதியில் திமுக 2024 தேர்தலில் 1,14,139 ஓட்டுகளைப் பெற்றுள்ளது. ஆனால் 2014இல் இதே தொகுதியில் திமுக 48,667 வாக்குகளைத்தான் பெற்றுள்ளது.
இதே தொகுதியில் 2014இல் அதிமுக 91,733 ஓட்டுகளைப் பெற்றுள்ளது. ஆனால் 2024இல் 51,260 ஓட்டுக்களைத்தான் வாங்கியுள்ளது. ஆக, அதிமுகவின் ஓட்டுக்கள் திமுக பக்கம் சென்றுள்ளதை இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதேபோல் சூலூர் தொகுதியில் திமுக இந்தமுறை 96,019 ஓட்டுகளைப் பெற்றுள்ளது. 2014இல் 46006 வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. அதிமுக இந்த முறை 52,962 வாக்குகளை வாங்கியுள்ளது. 2014இல் இதே கட்சி 79,687 ஓட்டுகளைப் பெற்றுள்ளது. எனவே இந்தத் தொகுதியில் அதிகப்படியான அதிமுக ஓட்டுகள் திமுக பக்கம் சாய்ந்துள்ளது.

கவுண்டம்பாளையத்தில் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. திமுக இங்கே பெற்ற வாக்குகள் 1,29,009. அதே 2014 மக்களவைத் தேர்தலில் 67,561 வாக்குகளைத்தான் இக்கட்சி பெற்றிருந்தது. ஆக, 2014க்கும் 2024 க்கும் 100% மேலான வாக்குகள் திமுகவுக்கு இங்கே அதிகரித்துள்ளது.
இதற்குக் காரணமாக இருந்தது அதிமுக. கவுண்டம்பாளையத்தில் 2014இல் 95,394 வாக்குகளை வாரிய அதிமுக 2024இல் 52,110 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
இப்படி கோவை தெற்கில் திமுக 61,929 பெற்றுள்ள நிலையில் 2014இல் 43,550தான் பெற்றுள்ளது. இதே தொகுதியில் அதிமுகவுக்கு 19,044 ஓட்டுகள்தான் விழுந்துள்ளது. இதே கட்சி 2014இல் 47,591 ஓட்டுகளைப் பெற்றுள்ளது.
கோவை வடக்கில் இந்தமுறை 80,963 பெற்ற திமுக கடந்த 2014ல் 47,856 வாக்குகளை வாங்கியுள்ளது. இங்கே 2014 இல் 62,402 வாக்குகளைப் பெற்ற அதிமுக 2024இல் 28,998 தான் வாங்கியுள்ளது. இதைப் போலவே திமுக சிங்காநல்லூரில் 2014இல் 53,957 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் இந்த முறை 83,369 என அதிகரித்துள்ளது.
இதே தொகுதியில் அதிமுக 2014இல் 54,102 வாங்கியது. 2024 31,226 தான் பெற்றுள்ளது. ஆக, அதிமுகவின் கணிசமான வாக்குகளைக் கோவைத் தொகுதியில் பாஜக பெறவில்லை. அதிமுகதான் பெற்றுள்ளது.
இந்தத் தொகுதியில் 2014இல் பாஜக 3,89,701 வாக்குகளைப் பெற்றது. இந்த 2024 4,50,132 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆக, அதிகப்படியான வாக்குகள் பாஜகவுக்கு விழவில்லை. கணிசமாக உயர்ந்துள்ளது.

ஆனால், திமுக கடந்த 2014இல் 3,08,242தான் வாங்கியது. இந்த முறை 5,68,200 ஓட்டுகளை வாங்கி உள்ளது. இது மாபெரும் வளர்ச்சி. அந்த வளர்ச்சி அதிமுகவைப் பாதிக்கும் வளர்ச்சி என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அவரது எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது 2014 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் களம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மோடி எதிர்ப்பை முன்வைத்தே செயல்பட்டுள்ளது.
அப்போது திமுகவுக்கு ஒரு எம்பி கூட கிடைக்கவில்லை. அதிமுக மொத்தம் 37 தொகுதிகளில் வென்றது. அதற்குக் காரணம் மோடி எதிர்ப்பு அலை. அதை இந்த ஆங்கில ஏடு பகுப்பாய்வு செய்யத் தவறிவிட்டது.
உதாரணமாக 2014இல் சிபி ராதாகிருஷ்ணன் (பாஜக): 33.12% வாக்குகளைக் கோவையில் பெற்றார். 2024இல் அண்ணாமலை (பாஜக) 32.79% வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் வாக்கு சதவீதமானது 68.4%+ லிருந்து 65.22% ஆகக் குறைந்துள்ளது. இதுவும் கூட அதிமுக வாக்கு குறைந்தது போனதற்குக் காரணமாக இருக்கிறது என்று அவர் ஒரு கணக்கைப் போட்டுக்காட்டி விளக்கம் அளித்துள்ளார்.
-
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?












Click it and Unblock the Notifications