தட்டி தூக்கிய கோயம்புத்தூர்.. மதுரை, திருச்சி நெருங்கவே முடியாது.. மிரள வைத்த மிகப்பெரிய சம்பவம்
கோவை: கோவை மாநகரம் தொழில் நகரமாக இருந்து வருகிறது. எங்கு திரும்பினாலும் தொழிற்சாலைகளும், உற்பத்தி நிறுவனங்களும் நிறைந்திருக்கும். சிறு குறு தொழில் நிறுவனங்களும் அதிகம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக ஐடி துறையும் வேகமாக வளர்ந்தது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலை நகரங்களில் ஐடி மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முதலிடத்தினை பிடித்துள்ளது.
கோவை மாநகரமும், சென்னை மாநகரத்தை போல் ஐடி அல்லாத தொழில் நகரங்களில் ஒன்றாகவே இருந்து வந்தது. 90களின் இறுதிவரை சென்னையை பொறுத்தவரை ஆட்டோமொபைல் நகரமாகவே இருந்தது. அதாவது இந்தியாவில் ஓடும் பேருந்து,கார், பைக் போன்றவை சென்னையில் தான் அதிகம் தயாரிக்கப்பட்டது. அதேபோல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியும் சென்னையில் மிக அதிகம். ஆனால் 90களில் படிப்படியாக நிலைமை மாறியது.

சென்னை ஐடி வளர்ச்சி
பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை புதிய சாலை உருவானது.. வேளச்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஐடி தொழில் மின்னல்வேகத்தில் வளர்ந்தது. ஆட்டோமொபைல் நகரம் ஒரு காலக்கட்டத்தில் ஐடி நகரம் என்று சொல்லும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்தது. பெங்களூர், ஹைதராபாத் அளவிற்கு ஐடி துறை சென்னையில் வளரவில்லை என்றாலும், அதற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வளர்ச்சி சென்னையில் தான் ஏற்பட்டது. சென்னை வேகமாக ஐடி நகரமாக மாறியது. இன்று மிகப்பெரிய ஐடி நகரங்களில் ஒன்றாக உள்ளது.
கோவை வளர்ச்சி எப்படி
அதேபோல் போல் கோவை ஒரு காலத்தில் . எங்கு திரும்பினாலும் தொழிற்சாலைகளும், உற்பத்தி நிறுவனங்களும் நிறைந்திருக்கும். ஆனால் இன்றும் கோவையில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன.. என்ன... அவரை கோவைமாநகருக்கு வெளியே போய்விட்டன. நகருக்குள் குறைந்த அளவே தொழிற்சாலைகள் உள்ளன. அதேநேரம் கோவை மாநகரில் ஐடி நிறுவனங்கள் வருகை என்பது கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
மெட்ரோ அல்லாத நகரம்
இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் என்றால், டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர்,கொல்கத்தா, ஹைதராபாத், புனே, அஹமதாபாத் ஆகிய எட்டு நகரங்கள் தான். அதற்கு அடுத்தபடியாக உள்ள பெரிய நகரங்கள் எல்லாமே இரண்டாம் நிலை நகரங்கள் ஆகும்... அந்த இரண்டாம் நிலை நகரங்களில் மிக வேகமாக வளரும் நகரங்களில் கோவை முக்கியமான இடத்தில் உள்ளது. கோவையில் ஏற்கனவே உள்ள தொழில்துறையை தவிர, தற்போது மிகப்பெரிய அளவில் ஐடி துறையும் வளர்ந்து வருகிறது.
சரவணம்பட்டி
ஒரு காலத்தில் கோவை கணபதி மற்றும் தாண்டினால் வெறும் தொழிற்சாலைகள் தான் இருக்கும். ஆனால் சத்தி சாலையில் உள்ள சரவணம்பட்டியில் ஐடி நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. கோவையில் சரவணம்பட்டிக்கு அடுத்தடியாக, விளாங்குறிச்சியிலும், அவினாசி சாலையிலும் அதிகரித்து வருகின்றன. தமிழக அரசின் எல்காட் பங்களிப்புடன் ஐ.டி. பார்க் கோவையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான புதிய நிறுவனங்கள் கால் பதிக்க தொடங்கி உள்ளன.
கோவை முதலிடம்
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக 2-ம் கட்ட நகரங்களில் ஐ.டி. மென்பொருள் ஏற்றுமதியில் கோவை முதலிடத்தை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கோவையில் இருந்து 2024-25-ம் ஆண்டில் மென்பொருள் ஏற்றுமதி ரூ.15 ஆயிரத்து 105 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை திருச்சியில் ஐடி ஏற்றுமதி எவ்வளவு
இதற்கு அடுத்தபடியாக மதுரை மென்பொருள் ஏற்றுமதியில் ரூ.1,905 கோடியாகவும், திருச்சி ரூ.899 கோடியாகவும் உள்ளது. திருநெல்வேலி ரூ.251 கோடியாகவும், சேலம் ரூ.130 கோடியாகவும், ஒசூர் ரூ.15 கோடியாகவும் உள்ளது. அதாவது கோவைக்கு பக்கத்தில் கூட எந்த நகரமும் இல்லை..
கோவை சரவணம்பட்டி
கோவையிலேயே அதிகபட்சமாக சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். வளாக பகுதியில் இருந்து ரூ.6,873 கோடிக்கு மென் பொருள் உற்பத்தி நடந்துள்ளது. சரவணம்பட்டி ஐடி வளாகத்தில் மட்டும் 37 ஆயிரத்து 847 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக விளாங்குறிச்சியில் உள்ள டைடல் பார்க் மூலம் ரூ.4,671 கோடிக்கு மென் பொருள் உற்பத்தி நடந்துள்ளது. விளாங்குறிச்சி ஐடி பார்க்கில் 28,621 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
15000 கோடி உற்பத்தி
கோவையில் ஸ்பான்வென்சர்ஸ் நிறுவனம் ரூ.443 கோடி அளவுக்கு மென் பொருள் உற்பத்தி செய்திருக்கிறது. அங்கு 3,012 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிறுவனம் உள்பட பல்வறு நிறுவனங்கள் சேர்ந்து தான் கோவையில் ரூ.15 ஆயிரத்து 105 கோடிக்கு மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளன. கோவையில் ஐடி நிறுவனங்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சரவணம்பட்டியில் நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. பல வெளிமாநில ஐடி நிறுவனங்கள் கோவைக்கு தடம் பதிக்க ஆர்வம் காட்டுகின்றன. சென்னையில் ஓஎம்ஆர் என்றால், கோவையில் சரவணம்பட்டி மிகப்பெரிய ஐடி நகரமாக உருவெடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications