கோவை ரோட்டில் பறந்த பைக்.. இரவில் ஓட்டல் ரூம் கதவை திறந்ததுமே ஆடிப்போன சென்னை போலீஸ்.. யாரிந்த பெண்?
சென்னை: "பள்ளி மாணவிகள் பலரும், இன்ஸ்டாகிராமில் முகம் தெரியாத ஆட்களோடு பழகி தங்களையே தொலைத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் இன்ஸ்டாகிராமில் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை கண்காணித்து அவர்களை பத்திரப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பிள்ளைகளின் வாழ்க்கையே பாழாகிவிடும்" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் தெரியுமா? சென்னையில் என்ன நடந்தது?
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த அந்த மாணவிக்கு 14 வயதுதான் ஆகிறது.. தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டில் தங்கி 8ம் வகுப்பு படித்து வருகிறார்.. எப்போதுமே செல்போனும் கையுமாக இந்த மாணவி இருப்பாராம். இதனால் இன்ஸ்டாகிராமில் அதிக ஆர்வத்தையும், நேரத்தையும் செலவிட்டு வந்துள்ளார்..

3 மாத காதல்
தெரிந்தவர்கள் மட்டுமில்லாமல் தெரியாத நபர்களுக்கும் மெசேஜ் செய்து, அவர்களுடன் மணிக்கணக்கில் பேசி வந்திருக்கிறார்.. அந்தவகையில், பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது சூர்யா என்ற இளைஞரும் மாணவிக்கு இன்ஸ்டாவில் நட்பாகியிருக்கிறார்.. உடனே இருவருக்கும் காதல் வந்துவிட்டது.. இது 3 மாத காதல் ஆகும்.
இந்த 3 மாதத்தில், இரவு நேரங்களில் நீண்ட நேரம் சூர்யாவுடன் மாணவி இன்ஸ்டாவில் பேசிவந்துள்ளார்.. இதனால் சூர்யாவின் பேச்சும் ஆபாசமாகவே இருந்து வந்துள்ளது.. பிறகு 2 பேரும் வீடியோ காலிலும் அரைகுறை டிரஸ்ஸில் பேசி வந்துள்ளனர்..
மாணவியை வீடியோ காலில் பார்த்ததுமே, அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று சூர்யா நினைத்துள்ளார்.. எனவே மாணவியை பார்ப்பதற்கு பொள்ளாச்சியில் இருந்து பைக்கிலேயே சென்னைக்கு சென்றுள்ளார்.
பொள்ளாச்சி டூ சென்னை
நேற்று முன் தினம் இரவு ஆவடிக்கு வந்து சேர்ந்த சூர்யா மாணவியின் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தினார்.. பிறகு போன் செய்து, வாசலில் நிற்கிறேன், வெளியில் போகலாம் என்று கூப்பிட்டுள்ளார். மாணவியும் உடனே கிளம்பியிருக்கிறார். ஆனால் அதற்குள் அவரது பாட்டி, "நைட் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது" என்று தடுத்து நிறுத்தினார்..
இதனால் ஆத்திரமடைந்த மாணவி, பாட்டியை கீழே தள்ளி விட்டுவிட்டு, சூர்யாவின் பைக்கில் ஏறி சென்றுவிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி, இரவு நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப்போனார்.
லாட்ஜ்ஜில் ரூம்
பிறகு உடனடியாக ஆவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீசாரும் தனிப்படை அமைத்து, சூர்யாவையும், மாணவியையும் தேடினார்கள்.. அப்போது இருவரும் தாம்பரத்தில் உள்ள லாட்ஜ்ஜில் ரூம் எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது..
பிறகு போலீசார் அந்த லாட்ஜுக்கு விரைந்து சென்று, அவர்கள் தங்கியிருந்த ரூமில் அதிரடியாக நுழைந்தனர்.. அப்போது இருவரும் ஒன்றாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், மாணவியை பத்திரமாக மீட்டதுடன், சூர்யாவையும் போக்சோவில் கைது செய்தனர்.. மாணவியிடம் சூர்யா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதும் உறுதியானதையடுத்து, அவரை போலீசார் ஜெயியிலில் அடைத்துள்ளனர்.
போலீசார் வேண்டுகோள்
இது தொடர்பாக போலீசார் சொல்லும்போது, "பள்ளி மாணவிகள் பலரும், இன்ஸ்டாகிராமில் முகம் தெரியாத ஆட்களோடு பழகி தங்களையே தொலைத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் இன்ஸ்டாகிராமில் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை கண்காணித்து அவர்களை பத்திரப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே பாழாகிவிடும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பல ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு -
கோயம்புத்தூர் மக்களுக்கு குட்நியூல்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications