தென்னை நார் தொழில்.. "இனி பிரச்சினையே இல்லை.." தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெறி அறிவிப்பு!
சென்னை: தென்னை நார் உற்பத்தி தொழிலை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்திப் பிறப்பித்த உத்தரவைத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாபஸ் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் பல லட்சம் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளனர். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தென்னை மர வளர்ப்பும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

அதேபோல தென்னை நார் உற்பத்தி தொழிலும் தமிழ்நாட்டில் முக்கியமான தொழிலாகவே இருக்கிறது. இதற்கிடையே கடந்த 2021 நவம்பர் மாதம் தென்னை நார் உடைத்தல், டி-ஃபைபர், பித் பதப்படுத்துதல் தொழில் ஆகியவற்றை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்தியது.
தென்னை நார் தொழில்: இதற்குத் தென்னை நார் உற்பத்தி தொழிலில் ஈடுபடுவோர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல மாவட்டங்களில் தென்னை நார் உற்பத்தி மக்களுக்கு வாழ்வாதாரமாகவே இருக்கிறது. மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையை ஊக்குவிக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது.
இந்த தென்னை நார் உற்பத்தித் துறை கடந்த 2021இல் வெள்ளை நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி இனிமேல் நார் உற்பத்தி செய்யத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோர வேண்டும் என்ற நிலை உருவானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தென்னை நார்த் தொழிலில் மீண்டும் வெள்ளை நிற பிரிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்: இது தொடர்பாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னை நார் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்திக்காக குறு மற்றும் சிறிய வகை (MSME) தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்கும், மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் தென்னை நார் தொழிற்சாலைகள் கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறது.
எனவே 'தென்னை நார் தயாரித்தல் /டி-ஃபைபர் / பித் பதப்படுத்துதல் தொழில் (Coconut husk retting/ de-fibreing/ pith processing industry)' ஆகியவற்றை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்திய 10.11.2021 தேதியிட்ட வாரியத்தின் நடவடிக்கை எண். T2 / TNPCB / F.13367 / 2021 திரும்பப் பெறப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications