ஆற்றலை வைத்து எடப்பாடி ஆடிய கேம்.. கொதித்து போன கொங்கு மண்டல டீம்.. அதிமுகவில் பெரும் பனிப்போர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி நல்ல அரசியல் தெரிந்தவர். சசிகலாவையே வீழ்த்தியவர் அவர். அதிமுகவையே கூவத்தூரில் ஏலத்திற்கு எடுத்தவர் அவர். இப்போது கூட இருக்கும் பழைய தலைகளை காலி செய்வதற்காக எடப்பாடி புதிய தலைகளை மாவட்டத்திற்கு மாவட்டம் இறக்க பார்க்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. அந்த கட்சியில் லோக்சபா தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Cold war started between Kongu leaders and Edappadi Palanisamy in AIADMK

பேட்டி: அதில்,எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு பெல்ட் டீம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இவைகள் நம்மை பிளாக் மெயில் செய்கிறார்கள் என்று எடப்பாடி நினைக்கிறார். ஈரோடு வேட்பாளர் ஆற்றல் அசோக்கிற்கு சீட் கொடுக்க கூடாது என்று தங்கமணி நினைக்கிறார். ஆனால் அதை எடப்பாடி கேட்கவில்லை. வேண்டும் என்று தங்கமணி எதிர்க்கிறார். ஆனால் எடப்பாடி கேட்காமல் இப்படி செய்கிறார்.

தங்கமணியை காலி செய்ய ஆற்றலை எடப்பாடி இறக்குகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் எடப்பாடி புதிய ஆட்களை கொண்டு வருகிறார். அப்படி ஒரு ஆள் எடப்பாடி. நல்ல அரசியல் தெரிந்தவர். சசிகலாவையே வீழ்த்தியவர் அவர். அதிமுகவையே கூவத்தூரில் ஏலத்திற்கு எடுத்தவர் அவர். இப்போது கூட இருக்கும் பழைய தலைகளை காலி செய்வதற்காக எடப்பாடி புதிய தலைகளை மாவட்டத்திற்கு மாவட்டம் இறக்க பார்க்கிறார்.

செங்கோட்டையனை கூவத்தூரில் முதல்வராக்க எல்லாம் பார்க்கவில்லை. வெறுமனே மரியாதைக்கு கேட்டனர். மற்றபடி இப்போதுதான் செங்கோட்டையன் உண்மையில் அப்செட்டில் இருக்கிறார். கொங்கு மண்டல டீம் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வர எடப்பாடி நினைக்கிறார். செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே வி ராமலிங்கம் எல்லோரும் நாங்கள் பாஜக போக போகிறோம் என்று எடப்பாடியை மிரட்டுகின்றனர். எடப்பாடியை வழிக்கு கொண்டு வர இப்படி செய்கின்றனர்.

உண்மையில் அவர்கள் செல்லவில்லை. செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே வி ராமலிங்கம் ஆகியோரை இழக்க எடப்பாடி தயார் இல்லை. செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே வி ராமலிங்கம் ஆகியோர் எடப்பாடிக்கு தேவை. இதனால் எடப்பாடி வழிக்கு வருவார். இந்த நாடாளுமன்ற தேர்தல் எடப்பாடிக்கு பெரிய பாடம் கற்பித்து உள்ளது.

ஜெயலலிதா பாதையில் சென்றால்தான் கட்சியை கட்டுப்படுத்த முடியும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு முடிவிற்கு வந்துள்ளது. எடப்பாடியை காப்பாற்றிய கொங்கு டீம் அவருக்கு எதிராக திரும்பி உள்ளது . ஆனால் கவுண்டர் சமுதாயம் திரும்பி உள்ளது என்று சொல்ல மாட்டேன். இப்போது எடப்பாடிக்கு எச்சரிக்கை மணி சென்றுள்ளது.

இதனால் கொங்கு மண்டல நிர்வாகிக்கு வழி விட வேண்டும். எடப்பாடி இவர்களுக்கு வழி விட வேண்டும். இவர்கள்தான் எடப்பாடி பழனிசாமியை வளர்த்துவிட்டனர். ஆற்றல் அசோக்குமார் போன்றவர்களை எடப்பாடி நம்ப கூடாது.

அதிமுகவில் செங்கோட்டையன் - எடப்பாடி இடையே கோல்டு வார் ஏற்பட்டு உள்ளது. பனிப்போர் ஏற்பட்டு உள்ளது. அதிமுகவில் எடப்பாடியை விட சீனியர் செங்கோட்டையன். அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் அரசியல் செய்தவர் செங்கோட்டையன். அப்போது சிலுவம்பாளையம் கிளை செயலாளர் எடப்பாடி. அப்போதே செங்கோட்டையன் எம்எல்ஏவாக இருந்தவர் அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பிக்கொண்டு இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+