கெட்ட வார்த்தையால் திட்டிய மணிகண்டன்.. தூக்கு போட்டு உயிரை விட்ட வளர்மதி.. சென்னையில் விபரீதம்
சென்னையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: வளர்மதியை காதலன் மணிகண்டன் கெட்ட வார்த்தையால் திட்டி விட்டார்.. அதுக்காக வளர்மதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவானி, இவர்களது 19 வயது மகள்தான் வளர்மதி. தண்டையார் பேட்டையில் உள்ள காலேஜில் முதலாம் வருஷம் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென, வளர்மதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து பதறி, மகளை கட்டிக் கொண்டு அழுதனர் பெற்றோர்.உடனடியாக ஓட்டேரி போலீசில் புகார் தரவும், விசாரணையை துவங்கினர்.
அப்போதுதான் வளர்மதி தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், புளியந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் என்ற 20 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இருவருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு வந்துள்ளது. அதனால் மணிகண்டன் போன் பண்ணி வளர்மதியை ஆபாசமாக திட்டி இருக்கிறார். இதில் மனம் உடைந்து போன வளர்மதி, லட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவரங்கள் எல்லாம் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து பெற்றோர், உறவினர்கள் மேலும் அதிர்ந்தனர்.
இதனிடையே விஷயம் தெரிந்து கல்லூரி மாணவர்கள் விரைந்து வந்துவிட்டனர். புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே அனைவரு ஒன்று கூடி, மணிகண்டன் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெற்றோர், உறவினர், பொதுமக்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக திரண்டு மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியே பரபரப்பானது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications