கோடி பிரச்சினைகள் காத்திருக்கின்றன தேடி தீர்ப்போம் வா - கமல்ஹாசன் அழைப்பு
கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தில் சீரமைக்கப் போவதன் முன்னோட்டமாக நமது காரியங்கள் எனது பிறந்த நாளில் இருந்தே தொடங்கட்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 66 ஆண்டு கால வாழ்க்கையில் 60 ஆண்டுகளை கலைக்காகவே அர்ப்பணித்து கலைச்சேவை ஆற்றி வருகிறார். 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போதே அந்த திரைப்படத்திற்காக கமலஹாசனுக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு விருது தேடி வந்தது. முதல் படத்தை விருதுடன் துவங்கிய கமல் ஹாசன் தனது கலைப்பயணத்தில் 3 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ, செவாலியர் விருது என வேறு எந்த நடிகராலும் நெருங்க முடியாத அங்கீகாரங்களோடு உயர்ந்து நிற்கிறார்.
ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய கமல்ஹாசன் தனது பிறந்தநாளில் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பின்னர் நலத்திட்ட பணிகளை அதிகரித்து வருகிறார் கமல்ஹாசன்.

கமல் பிறந்தநாள்
இன்று 66வது பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசன் தனது ரசிகர்கள், தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் நலனே என் நோக்கு, தமிழகத்தை சீரமைப்பதே நம் இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் பரிசு
கொரோனா சூழல் கொண்டாட்டத்திற்கு உரியது அல்ல. நமக்கு பல வேலைகள் காத்திருக்கின்றன. எனது பிறந்தநாளில் நற்பணிகளை செய்யுங்கள். அதுவே நீங்கள் எனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு.

தேடி தீர்ப்போம் வா
தேடி தெருக்களில் இறங்கினால் கோடி பிரச்சினைகள் காத்திருக்கின்றன. தேடி தீர்ப்போம் வா என்ற வாக்கியத்தை மனதில் ஏந்தி நற்பணிகளை செய்யுங்கள். தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தில் சீரமைக்கப் போவதன் முன்னோட்டமாக நமது காரியங்கள் எனது பிறந்த நாளில் இருந்தே தொடங்கட்டும்

திண்டாட்டங்களை போக்குவோம்
நம்முடைய மரபணுவை மைக்ரோஸ்கோப்பில் சோதித்தால் நேர்மை, திறமை, அஞ்சாமை ஆகிய மூன்றும்தான் எதையும் விட எஞ்சி நிற்கும் என்பதை நெஞ்சு நிமிர்த்து சொல்லும் திமிர் நமக்கு உண்டு. அத்திமிர் என்றென்றும் தொடரட்டும். கொண்டாட்டங்களை தவிர்த்து மக்களின் திண்டாட்டங்களை போக்கும் தினமாக எனது பிறந்தநாளை மாற்றிக்காட்டுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு












Click it and Unblock the Notifications