இதுதான் இந்தியன் தாத்தாவா? கூர்கா வேடத்தில் வந்த கூல் சுரேஷ்! குதிரையோடு கதற விட்ட ஹாஹா சம்பவம்
சென்னை: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இந்தியன் 2 படம் வெளியான திரையரங்குக்கு நடிகர் கூல் சுரேஷ் இந்தியன் தாத்தா வேடத்தில் குதிரையில் ஏறி வந்தார். அவரது கெட்டப் இந்தியன் தாத்தா போல் இல்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்னால் உலகநாயகன் கமல்ஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இணைந்து உருவாக்கிய இந்தியன் படம் வெளியானது. இதில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி,செந்தில் என பல நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர்.

அந்த காலத்திலேயே பிரம்மாண்ட செட்கள், கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான இந்தப் படம் பெருவெற்றி வெற்றது. குறிப்பாக இந்தியன் தாத்தா மற்றும் வயதான சுகான்யாவுக்கு மேக்-அப் போடுவதற்கு ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் படத்திற்கு பிறகு முதல்வன், நண்பன், சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படைப்புகளை சங்கர் கொடுத்திருந்தாலும் கமலஹாசனும் ஷங்கரும் எப்போது இணைவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இதற்கு விடை கொடுக்கும் விதமாக மிகப்பெரிய பொருட்செலவில் இந்தியன் 2 உருவாகும் என அறிவிக்கப்பட்டது. லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் சங்கர் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் உடன், எஸ்ஜே சூர்யா, சித்தாத், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ்,பாபி சிம்ஹா என பல நட்சத்திர பட்டாளமே இணைந்து இருந்தது. இதனிடையே இடையே நடிகர் கமலஹாசனின் அரசியல் என்ட்ரி, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, கொரோனா என பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. ஒரு வழியாக படம் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கிறது.
உலகம் முழுவதும் நானூருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தியன் 2 படம் வெளியாகி இருக்கும் அலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியன் 2 வெளியாகியுள்ள திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கமலஹாசன் ரசிகர்கள் படத்தை வரவேற்று வருகின்றனர். தற்போது முதல் காட்சி நிறைவடைந்திருக்கும் நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தியன் முதல் பாகத்தில் இருந்த பிரம்மாண்டம் இந்தப் படத்தில் இருக்கும் நிலையில், அழுத்தமான கதை அம்சம் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இந்தியன் 2 வெளியான தியேட்டரில் பிரபல காமெடி நடிகரான கூல் சுரேஷ் செய்த அலப்பறை தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அந்தப் படத்திற்கு பிரமோஷன் கொடுப்பதற்காக விதவிதமான கெட்டப்புகளில் கூல் சுரேஷ் வருவது வழக்கம். அந்த வகையில் இந்தியன் டு படத்திற்காக இந்தியன் தாத்தா கெட்டப் போட்டு குதிரையில் அமர்ந்து வந்தார் கூல் சுரேஷ்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரை பேட்டி எடுக்க, தாத்தா கதறவிட போறாரு என கூல் சுரேஷ் சொன்னார். அப்போது அருகில் இருந்து ரசிகர்கள் நீங்கள் தான் எங்கள கதற விடுறீங்க என கவுண்டர் கொடுத்தனர். இதனால் ஒரு நிமிடம் அப்செட் ஆனார் கூல் சுரேஷ். தற்போது இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கூல் சுரேஷ் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இல்லை... இரவு நேரங்களில் உலா வரும் கூர்க்கா கெட்டப்பில் இருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications