• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைவா எழுந்து வா? மருத்துவமனையில் டி.ஆர்..! அங்கப்பிரதட்சனம் செய்து நெய் விளக்கேற்றிய காமெடி நடிகர்!

Google Oneindia Tamil News

சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகரும் இயக்குனரும், நடிகர் சிலம்பரசனின் தந்தையுமான டி.ராஜேந்தர் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி காமெடி நடிகர் கூல் சுரேஷ் அங்கப்பிரதட்சணம் செய்து நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தார்.

Recommended Video

  டி.ராஜேந்தர் மீண்டு வரணும் நடிகர் கூல் சுரேஷ் பிரார்த்தனை

  பல ஆண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ் திரையுலகில் எவ்வித பின்புலமும் இல்லாமல் தனது திறமை ஒன்றையே நம்பிக்கையாகக் கொண்டு களமிறங்கி அதில் மாபெரும் வெற்றியையும் பெற்றவர் டி.ஆர்.ராஜேந்தர்.

  இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர். ஒளிப்பதிவாளர், கதையாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவரான டி.ராஜேந்தர் ஆபாச காட்சிகளில் ஏன் பெண்களை தொட்டுக் கூட நடிக்காதவர். இதேபோல் மது, புகை பிடிப்பது உள்ளிட்ட காட்சிகளில் நடித்திராதவர்.

  ஒற்றைக்காலில் தாவி குதித்து பள்ளி செல்லும் சிறுமி.. உதவ முன்வந்த நடிகர் சோனு சூட் ஒற்றைக்காலில் தாவி குதித்து பள்ளி செல்லும் சிறுமி.. உதவ முன்வந்த நடிகர் சோனு சூட்

  டி.ராஜேந்தர் உடல்நிலை

  டி.ராஜேந்தர் உடல்நிலை

  இதன் காரணமாக இவருக்கு பெண் ரசிகைகள் குறிப்பாக தாய்மார்கள் ஆதரவு அதிகம். வீராசாமி, ஒரு தலை ராகம், உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி, மைதிலி என்னை காதலி என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது மகன சிம்பு என்ற சிலம்பரசனும் நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என திரையுலகில் வலம் வருகிறார். டி.ஆர்.ராஜேந்தர் உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சிம்பு அல்லாமல் குரலரசன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

  மருத்துவமனையில் அனுமதி

  மருத்துவமனையில் அனுமதி

  தற்போது டி.ராஜேந்தருக்கு தற்போது 67 வயதாகும் நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன், நெஞ்சு வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

  சிம்பு அறிக்கை

  சிம்பு அறிக்கை

  இந்தநிலையில், டி.ராஜேந்தர் உடல் நிலை குறித்து நடிகர் சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்," எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம் " என குறிப்பிட்டிருந்தார்.

  கூல் சுரேஷ் வேண்டுதல்

  கூல் சுரேஷ் வேண்டுதல்

  இந்நிலையில், திரைப்பட நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக அவரது ரசிகரும் அவரது ஆதரவாளருமான காமெடி நடிகர் கூல் சுரேஷ் திருவண்ணாமலை கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டுதல் மேற்கொண்டார். மேலும் எலுமிச்சை பழத்தில் நெய் விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை மற்றும் செய்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  English summary
  comedy actor Cool Suresh prayed for Actor and director and actor Silambarasan father t rajendar who is undergoing treatment at the hospital
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X