"கிணத்தை காணோம்" புகழ் நடிகர் நெல்லை சிவா.. மாரடைப்பால் திடீர் மரணம்.. வயது 65
சென்னை: பிரபல நடிகர் நெல்லை சிவா இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். திருநெல்வேலியில் தங்கி இருந்தவருக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது.
Recommended Video
பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா கோலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்தவர். நடிகர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.
சின்ன வேடத்தில், சில நிமிடங்கள் வந்து சென்றாலும், தன்னுடைய நெல்லை ஸ்லாங்கில் அழகாக பேசி, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவா. ஆண்பாவம் படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.

நடிப்பு
வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.

படங்கள்
கற்றது களவு, சகுனி என்று கிட்டத்தட்ட 150 படங்களில் நெல்லை சிவா நடித்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர தோற்றங்களிலும் கூட இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார்.

வாய்ப்பு
அதிலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் நெல்லையில் பணகுடியில் தங்கி இருந்த நெல்லை சிவாவிற்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்.

மருத்துவமனை
ஆனால் மருத்துவமனை செல்லும் முன் இவரின் உயிர் பிரிந்தது. இவரின் இறுதிச்சடங்கு பணகுடியில் நாளை நடக்கிறது. திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் இவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications