"புளிப்பு சுவை பிடித்தது" இந்திரஜாவுக்கு 5 வது மாத வளைகாப்பு.. பூரிப்பில் ரோபோ சங்கர் குடும்பம்!
சென்னை: கடந்த மார்ச் மாதம் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா - கார்த்திக் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்திரஜா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்தாம் மாத வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரைகளில் காமெடிகளில் கலக்கிய ரோபோ சங்கர் தற்போது வெள்ளித்திரையிலும் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர், தனது அசாத்திய காமெடி திறனால், பல கஷ்டங்களை தாண்டி இன்று புகழின் உச்சத்தை எட்டியிருக்கிறார்.

ரோபோ சங்கருக்கு இந்திரஜா சங்கர் என்ற மகள் உள்ளார். நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இந்திரஜா நடித்து இருந்தார். அவருடைய நடிப்பும் பெரிய அளவில் பிகில் படத்தில் பேசப்பட்டது. பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற இந்திரஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது மாமாவான கார்த்திக் என்பவரை இந்திரஜா திருமணம் செய்து கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் பிரம்மாண்டமாக இந்திரஜா - கார்த்திக் ஜோடி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் கமல்ஹாசன், நயன்தாரா, சூர்யா, ஜோதிகா என்று அதிகமான பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியிலேயே இந்திரஜாவின் கணவர் கார்த்திக், நாங்கள் இருவருமே அப்பா -அம்மா ஆகப் போகிறோம் என்று அறிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கர்ப்பத்தை அறிவித்த நிலையில், இந்திரஜா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்தாம் மாத வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புளிப்பு சுவை பிடித்து, குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்து ரசித்த நாள்... 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா என்ற கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்திரஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications