1.6 லட்சம் வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் வானியல் அதிசயம்! பார்க்க தவறாதீங்க
சென்னை: G3 ATLAS (C/2024) என்று அழைக்கப்படும் வால் நட்சத்திரம் இன்று பூமியை கடந்து செல்கிறது. இது சுமார் 1.6 லட்சம் வருடங்களுக்கு ஒருமுறை இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு நெருக்கமாக வருகிறது.
மீண்டும் இந்த நட்சத்திரத்தை பார்க்க 1.6 லட்சம் வருடங்களாகும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வாய்ப்பு இருந்தால் இந்த நட்சத்திரத்தை நேரில் பார்க்க முடியும்.

வால்நட்சத்திரங்கள் தூசி மற்றும் பனி கட்டிகளால் ஆனது. இது சூரியனை நெருங்கும்போது உருகி, தனக்குள் இருக்கும் தூசிகளை வெளியேற்றும். எனவே பார்ப்பதற்கு நீண்ட வால் போன்ற உருவத்தை கொடுக்கும். அந்த வகையில் G3 ATLAS (C/2024) எனும் வால் நட்சத்திரம், மிக பழமையானதாகும். கடந்த 1.6 லட்சம் வருஷத்திற்கு முன்னர் இது பூமியை கடந்து சென்றிருக்கிறது. மீண்டும் தற்போது வந்திருக்கிறது. அனேகமாக இதுவே இந்த நட்சத்திரத்தின் கடைசி சுற்றாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பூமியின் வட அரைக்கோளத்தில் உள்ள நாடுகளில் இதனை இன்று நன்றாக பார்க்க முடியும். அதாவது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்க நாடுகளில் இது நன்றாக தெரியும். இந்தியாவில் இருந்து பார்த்தால் தெரியுமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். ஏனெனில் சூரியனுக்கு பக்கத்தில் வால் நட்சத்திரம் தெரியும் என்பதால் இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்து பார்த்தால் தெரிய வாய்ப்பு குறைவு. அதேபோல, தென் இந்தியாவில், இலங்கையில் இருந்து பார்த்தால் தெரிய வாய்ப்பு இருக்கிறது.
இந்த நட்சத்திரம் 8.7 கொடி கி.மீ தொலைவில் கடந்து செல்கிறது. இருந்தாலும் பார்க்க நன்றாக தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விண்கற்களும் வால் நட்சத்திரங்களும்:
விண்கற்கள் என்பது வேறு, வால் நட்சத்திரம் என்பது வேறு. பூமி மீது தினந்தோறும் சில விண்கற்கள் விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் சில விண்கற்கள் மட்டும் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் பூமி மீது மிகப்பெரிய விண்கல் மோதியது. இதில் டைனோசர்கள் உள்ளிட்டவை அழிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications