விஜய் அரசியலை எதிர்க்கத் தயங்கும் தலைவர்கள்? உள்குத்து என்ன? பழைய பயமா?
சென்னை: விஜய் தொடங்கி உள்ள புதிய அரசியல் கட்சிக்குக் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன சொன்னார்கள்? ஏன் பலரும் விஜய்யை விமர்சிக்க வில்லை. அதற்குள் மறைந்துள்ள செய்தி என்ன?
விஜய் தனது கட்சியின் பெயரை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் அறிவித்த சில மணிநேரத்தில் 'தமிழக வெற்றிக்கழகம்' எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்தது.

அவர் கட்சி தொடங்கி இருப்பதற்கு அரசியல் தலைவர்கள் யாரும் எதிர்மறை யாக கருத்து கூறவில்லை. அதற்குக் காரணம், காலம் வழங்கி இருக்கும் பாடம் என்றே சொல்ல வேண்டும்.
விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது விசிக தலைவர் திருமாவளவன் சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். பாமக மிகக் கடுமையாக விஜயகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்த்தது.
கடைசியில் அதே விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டி நிலை பாமகவுக்கு வந்தது. டாக்டர் ராமதாஸும் அன்பு மணியும் விஜயகாந்த் வீட்டுக்கே சென்று ஆதரவைக் கேட்டனர்.

அதைப்போல் விஜயகாந்த் அரசியல் வருகையை விமர்சித்திருந்தார் திருமாவளவன். அவர் கடைசியில் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்வைக்கும் மக்கள் நலக் கூட்டணிக்குள் போய்ச் சேர்ந்தார்.
அப்போது விஜயகாந்த்தை விமர்சித்திருந்தது வெளிப்படையாக மறுக்காமல் எற்றுக் கொண்டார் திருமாவளவன்.
திமுக, விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததை வரவேற்கவில்லை. ஆனால் மிகக் கடுமையாக எதிர்த்தது. நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக எதிர்த்தனர். இறுதியாக வடிவேலு பங்கேற்ற திமுக கூட்டத்தில் விஜயகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அக்கட்சியினர் அதை ரசித்தனர்.
அதன்பின்னர் கூட கூட்டணி பேரம் என துரைமுருகன் தேமுதிகவை அம்பலப்படுத்தினார். அதனால் தேமுதிகவின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறியது.
அதை எல்லாம் மனதில் வைத்துத்தான், இப்போது விஜய்யின் அரசியல் வருகையை யாரும் விமர்சிக்காமல் பட்டும் படாமல் வாழ்த்து வருகின்றனர்.
இனி விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து யார் யார்? என்ன சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.

உதயநிதி ஸ்டாலின்
இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்குவதற்கான உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். மக்கள் அனைவரின் சார்பாக எனது பாராட்டுக்கள். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்
ஜெயக்குமார்
அரசியல் என்பது பெருங்கடல். ஒரு சமுத்திரம். அதில் நீந்திக் கரை சேருபவர்களும் உண்டு. மூழ்கிப் போகின்றவர்களும் உண்டு. எனவே பொறுத்திருந்து பார்ப்போம். விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.
அவர் நீந்திக் கரை சேருகிறாரா? அல்லது மூழ்கிப் போகிறாரா என்பது தேர்தலில் அவர் நின்று வென்ற பிறகே சொல்ல முடியும். இதில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் தவறில்லை.
தமிழிசை செளந்தர்ராஜன்
நான் எந்தக் கல்லூரி விழாக்களில் பங்கேற்றாலும், படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். தமிழகத்திற்கு நிறையத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆகையால் விஜய் வந்துள்ளதை நான் வரவேற்கிறேன். இன்னும் நிறையத் தலைவர்கள் வரவேண்டும்.
திருமாவளவன்
ஜனநாயகத்தில் மக்கள் தொண்டு செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யாரும், எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம். பொதுமக்களுக்குத் தொண்டு செய்யலாம். அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

சீமான்
தொடங்குதல் எளிது. தொடர்வது என்பது நிறையக் கடினம். தொடங்கும்போது உள்ள ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் தம்பி மட்டும் விதிவிலக்கு இல்லை.
ஒரு நடிகரின் ரசிகர்கள் மட்டும் வாக்கு செலுத்தி நாட்டை ஆள்வது என்பது சரித்திர புரட்சியாகிவிடும். ஆனால், வெகுவான மக்களையும் நாம் இழுக்க வேண்டும். எம்.ஜி.ஆருக்கு பொதுமக்கள் ஆதரவு இருந்தது. அன்றைக்கு அரசியலில் வெற்றிடம் இருந்தது.
மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனத்தை வெல்ல வேண்டும். மக்களின் இதயத்திற்கு நெருக்கமாக இறங்கிச் செல்ல வேண்டும்.

கனிமொழி
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய்க்கும் அரசியலுக்கு வருவதற்கான எல்லா உரிமைகளும் உள்ளது. அவரது கட்சியால் திமுகவுக்கு எந்தப் பாதிப்பு இருக்காது.
இது ஒருநாளில் நடக்காது. அது தொடர்ந்து 10 ஆண்டுகள் பயணம் செய்து கொண்டே இருந்தால்தான் அது நடக்கும். அதைத் தம்பி விஜய் செய்வார் என்று நான் நம்புகிறேன்.

சரத்குமார்
யாருக்கு யாரும் அறிவுரை சொல்ல முடியாது. விஜய் நன்கு கலந்தாலோசித்துத்தான் இந்த முடிவை எடுத்திருப்பார். அவருக்கு என் வாழ்த்துகள்.
அன்பில் மகேஸ்
எங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மூலம் அறிமுகமானவர் விஜய். எங்களைப் பொறுத்தவரை அவரை நாங்கள் அண்ணனாகவே பார்க்கிறோம். உதயநிதிகூட விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சிலர் அவரை அரசியல் கட்சித் தலைவராகப் பார்க்கிறார் கள். நாங்கள் எங்கள் அண்ணனாகவே விஜய்யைப் பார்க்கிறோம்.

கட்சியில் 'திராவிடம்' என்ற வார்த்தை இல்லாதது குறித்த கேள்விக்கு இவர், 'கட்சிக்குப் பெயர் வைப்பது அவர் விருப்பம். அவரது கொள்கைகளைச் சொன்ன பிறகே அது குறித்துப் பேச முடியும்' என்றும் கூறியிருக்கிறார்.
-
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி











Click it and Unblock the Notifications