சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.. ஆனால் 14.2 கிலோ வீட்டு உபயோக LPG விலையில் மாற்றமில்லை
சென்னை: 19 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.29.50 உயர்ந்து ரூ.1929 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.29.50 உயர்ந்து ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1,899.50 ஆக இருந்தது.
அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூபாய் 868.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலைகளில் தாக்கம் ஏற்படும் என்றும் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications