எரிகிற தீயில் எண்ணெய்.. வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு.. வியாபாரிகள் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ரூ.2043.50 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை ரூ. 2,246.50 ஆக உயர்ந்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் விலையில் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி மதிப்பினை கணக்கில் கொண்டு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களானது எரிபொருள் விலையினை மாற்றி அமைத்து வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே மார்ச் மாதம் 7 ஆம் தேதி வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் அதிகரித்து இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையானது ரூ.115 அதிகரித்து ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிலிண்டர் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று வணிக சிலிண்டர் விலை மேலும் உயர்ந்துள்ளது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையில் ரூ.203 அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ. 2,246.50 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் அளவு உயர்ந்தது. இந்தியாவும் எரிவாயு மற்றும் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியையே பெரிதும் நம்பியிருப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லையென்றாலும் எரிவாயு பற்றாக்குறை நிலவுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் கிடைத்தாலும் வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதனால், நாடு முழுக்க ஹோட்டல்கள் நெருக்கடிக்கு உள்ளாகின. வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் கூட்டப்பட்டதோடு, புக்கிங் கால இடைவெளியும் அதிகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் வீட்டு பயன்பாட்டு 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. அதேபோல், வணிக பயன்பாட்டு 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.115 உயர்ந்தது.
இதன்படி, வீட்டு சிலிண்டர் ரூ.868.50-லிருந்து ரூ.928.50-ஆகவும், வணிக சிலிண்டர் ரூ.1,929-லிருந்து ரூ.2,043.50-ஆக உயர்ந்தது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று வணிக சிலிண்டர் விலை உயர்ந்ததால் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications