மாதத்தின் முதல் நாளே! எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
சென்னை: சென்னையில் வணிக சிலிண்டர்களின் விலை ரூ 10.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை குறைப்பு மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களுக்கும் பொருந்தும்.
மாதந்தோறும் 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றங்களை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இதனால் ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10. 50 காசுகள் குறைந்துள்ளது.
இதையடுத்து தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ 1739.50 க்கு விற்பனையாகிறது. அதே சமயம், சென்னையில் வீட்டில் பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ 868.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிலிண்டரின் விலை குறையாவிட்டாலும் உயராமல் இருப்பது இல்லத்தரசிகளுக்கு ஆறுதலை தருகிறது.












Click it and Unblock the Notifications