LPG Gas Price: வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.. சென்னையில் இன்றைய ரேட் என்ன?
சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.58.50 குறைந்தது. இதன் மூலம் 19 கிலோ எடை வணிக பயன்பாட்டின் சிலிண்டர் இன்று ரூ.1,823.50க்கு விற்பனையாகிறது. 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. மாதம் மாதம் ஒன்றாம் தேதி இந்த புதிய விலை அறிவிப்புகள் அமலுக்கு வரும்.

சென்னையை பொறுத்தமட்டில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலையை நிர்ணயிக்கின்றன. LPG விலைகளை மத்திய அரசு வழக்கமாக மாதந்தோறும் திருத்தம் செய்யும் நிலையில், இன்று வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி கேஸ் விலை குறைந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தினமும் மாறுவதை போல் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாறுகிறது. அந்த வகையில் இந்த மாதம் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்து இருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.58.50 குறைந்தது.
இதன் மூலம் 19 கிலோ எடை வணிக பயன்பாட்டின் சிலிண்டர் இன்று ரூ.1,823.50க்கு விற்பனையாகிறது. 4 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சிலிண்டர் ரூ 868.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வணிக சிலிண்டரின் விலை ரூ 41 குறைந்தது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ 1,91.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி மத்திய அரசு ரூ 50 உயர்த்தியது. இதனால் ரூ 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ 868.50-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் சிலிண்டர் விலை உயரவில்லை.
கடந்த ஜூன் மாதத்திலும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரிக்கவில்லை. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை மட்டும் ரூ 25 குறைந்து ரூ 1,881 க்கு விற்பனை செய்யப்பட்டது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சிலிண்டர் ரூ 868.50 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நடப்பு மாதத்திலும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications