மாறாத வீட்டு உபயோக சிலிண்டர் விலை! வர்த்தக சிலிண்டர் விலையில் ரூ 36.50 குறைவு.. நடுத்தர மக்கள் வேதனை
சென்னை: 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை ரூ 36.50 குறைந்து 2,141 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களில் கூட்டமைப்பு நிர்ணயம் செய்து வருகிறது.
கடந்த மே மாதம் 2 முறை வீட்டு உபயோக சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயையும் வர்த்தக சிலிண்டர் ரூ 2 ஆயிரத்தையும் தாண்டியது. ஜூன் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

வர்த்தக சிலிண்டர் விலை
வர்த்தக சிலிண்டர் விலையில் ரூ 134 குறைக்கப்பட்டது. ஜூலை 1 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அப்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்தது. அதன்படி 2,373 ரூபாயாக இருந்த வர்த்தக சிலிண்டரின் விலையானது ரூ 2,186 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஜூலை மாதம்
பின்னர் ஜூலை மாதத்திலேயே ரூ 8.50 குறைந்து ரூ 2,177.50 காசுகளுக்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றைய தினம் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் வர்த்தக சிலிண்டர் விலையில் ரூ 36.50 குறைக்கப்பட்டுளளது. இந்த நிலையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ 2,141 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தக சிலிண்டர் விலை எவ்வளவு
வர்த்தக சிலிண்டரை பெரும்பாலும் பெரிய பெரிய ஹோட்டல்கள் உள்ளிட்டோர்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வரும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை குறைக்காமல் தொடர்ந்து சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ 1018.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வேதனையில் உள்ளனர்.

பெட்ரோல் டீசல்
பெட்ரோல் டீசல் விலையும் ஒரு பக்கம் உயர்ந்துள்ளது, விலைவாசியும் மறுபக்கம் ஏறிக் கொண்டே போகிறது. இப்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மட்டும் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் இன்று வரை 450 ரூபாய் அளவுக்கு குறைத்துள்ளது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications