நியூ இயரில் வணிகர்களுக்கு வந்த குட் நியூஸ்.. 19 கிலோ சிலிண்டர் விலை குறைந்தது.. ரேட் என்ன?
சென்னை: ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி இன்று ஜனவரி மாதத்திற்கான சிலிண்டர் விலை குறித்த அப்டேட் வெளியானது. இதில், வணிக சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்துக்கொள்ள முடியும்.அதேபோல், சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் நாள் அல்லது 16ம் தேதி அன்று மாற்றி அமைக்கலாம்.

அந்த வகையில், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 39 குறைக்கப்பட்டது. திடீரென விலை குறைந்ததை அடுத்து சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1929.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இன்று மேலும் ரூ.4.50 குறைந்துள்ளது. புதிய விலைப்படி ரு.1924.50க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூபாய் 918.50 ஆக உள்ளது. 14.2 கிலோ சிலிண்டரின் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதே விலையில் எந்த வித மாற்றமும் இன்றி நீடிக்கிறதுசிலிண்டர் விலையை உயர்த்தும் போது இரட்டை இலக்க எண்களில் தடலாடியாக உயர்த்துவதும்.. குறையும் போது சொற்ப விலையே குறைக்கப்படுவதாக வணிகர்கள் மத்தியில் ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. புத்தாண்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக விலை அதிரடியாக குறையும் என எதிர்பார்த்த வணிகர்களுக்கு வெறும் 4.50 காசு மட்டுமே குறைந்து இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதேபோல், வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் குறைக்கப்படாமல் அதே விலையில் நீடிப்பது இல்லத்தரசிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் மக்களை மகிழ்விக்கும் விதமாக சிலிண்டர் விலை குறைக்கப்படலாம் என்ற தகவலும் வெளிவராமல் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications