சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் அதிரடியாக குறைப்பு.. பொதுமக்களுக்கு குட் நியூஸ்
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதம் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஏப்ரல் 1ம் தேதியான இன்று மாற்றியமைத்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களை ஒப்பிடும் போது, சிலிண்டர் விலை கணிசமாக குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.41 குறைத்துள்ளன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பிற பொருளாதார காரணிகளை அடிப்படையாக கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ( LPG விலைகள் மாதம் மாதம் முதல் தேதியில் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். ஆனால் அதேநேரம் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொறுத்தவரை விலை மாற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் பொதுவாக கடந்த சில மாதங்களாக அமல்படுத்தியது இல்லை..

சிலிண்டர் விலை குறைப்பு எவ்வளவு
எனினும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை மட்டும் அவ்வப்போது உயர்த்தியும் குறைத்தும் வருகின்றது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 1) முதல், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) 19 கிலோ வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.41 குறைத்துள்ளன.
சென்னையில் வணிக சிலிண்டர் விலை
சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் சில்லறை விற்பனை விலை இப்போது ரூ.1,924.50 ஆக குறைந்துள்ளது. முன்பு ரூ.1,965.50 ஆக இருந்த விலை தற்போது 41 ரூபாய் குறைந்து. ரூ.1,924.50க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு வணிக சிலிண்டர்களை பெரிதும் நம்பியுள் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு சற்று நிவாரணமாக பார்க்கப்படுகிறது.
வீடு சிலிண்டர் விலை
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அடிக்கடி மாற்றத்தை சந்தித்தாலும், வீட்டு சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உள்நாட்டு எல்பிஜி கேஸ் விலைகளில் எந்த திருத்தமும் செய்யப்படுவது இல்லை.. அந்த வகையில் இப்போதும் வீட்டு சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்கிறது.
வணிக சிலிண்டர் விலை மாற்றங்கள்
கடந்த மார்ச் 1ம் தேதி அன்று, முக்கிய நகரங்களில் வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலைகள் ரூ.6 அதிகரித்தன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான இண்டேன் படி, 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,797 லிருந்து ரூ.1,803 ஆக அதிகரித்திருந்தது பிப்ரவரி மாதத்தில் ரூ.7 குறைந்திருந்த நிலையில்,மார்ச் மாதம் உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி காரணமாக எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது 41 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி விலையில் பெரிய மாற்றங்கள்
கடந்த சில ஆண்டுகளாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கணிக்க முடியாத அளவிற்கு உயர்ந்து செலவுகளை அதிகரிதது வந்தன. குறிப்பாக சொல்வது என்றால் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், வணிக எல்பிஜி விலைகள் ரூ.352 உயர்ந்தது. இந்த விலை உயர்வு உணவகங்களை வெகுவாக பாதித்தது வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதேநேரம் வீடுகளுக்கு தரப்படும் எல்பிஜி சிலிண்டர் விலைகள் பல மாதங்களாக மாறாமல் உள்ளது.
-
எங்களுக்கு மட்டும் ஆசையா? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏன் தெரியுமா? இன்னமும் 703 ரூபாய் லாஸ் தானாம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications