சமாதானத்திட்டம்.. 50000 ரூபாய்க்கு கீழுள்ள வணிகவரி தள்ளுபடி.. முதல்வர் அறிவிப்பால் வணிகர்கள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகவரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை செலுத்துவதில் சலுகை வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 95 ஆயிரம் வணிகர்களுக்கு 50000 ரூபாய்க்கு கீழுள்ள நிலுவை வரியை தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் சமாதானம் என்னும் புதிய திட்டத்திற்கான சட்டம் உன் வடிவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி இன்று தாக்கல் செய்தார்.

Commercial tax rebate below 50000 rupees Traders happy with Chief Ministers announcement 110 rules

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரூ.50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். ரூ.50,000 கீழ் உள்ள தொகை தள்ளுபடி செய்யப்படுவதால் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயன்பெறுவார்கள். ரூ.10 லட்சம் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20% வரியை செலுத்தினால் போதும்.

வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வராமல் உள்ளது, நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன் வைத்தனர்.

வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தால் வணிகர்கள், வணிகவரித்துறை இடையேயான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும். பழைய நிலுவைத் தொகையை வசூலிக்க சமாதான திட்டத்தை கொண்டுவருகிறோம்.

வணிகர்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதில் 4 வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு வரலாற்றில் வணிகர்களுக்கு இத்தகைய சலுகை வழங்குவது இதுவே முதல்முறை. வரும் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இத்திட்டம், பிப்ரவரி 15, 2024 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+