உங்க பாஸ்வேர்டு இந்த எண்களில் இருந்தால் உடனே மாற்றுங்க.. இல்லைன்னா ஹேக்கர்ஸிடம் சிக்கிடுவீங்க
சென்னை: எளிதில் யூகிக்க கூடிய வகையில் பாஸ்வேர்டுகளை வைத்துக்கொள்வது சைபர் தாக்குதல்களுக்கு எளிதில் ஆட்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக 1234, 0000, பிறந்த தேதி போன்ற எளிதான பாஸ்வேர்டுகள் வைத்திருப்பது PIN- சைபர் கிரிமினல்கள் எளிதாக உங்கள் அக்கவுண்ட்டை ஹேக் செய்ய முடியும் என்று அத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பெரும்பாலான பணிகளை ஆன்லைன் மூலமே செய்து விட முடிகிறது. வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றம் செய்வது முதல் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது வரை மொபைல் போனில் செய்து விட முடியும். மக்களிடையே டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துவிட்ட சூழலில், மோசடிகளும் இன்னொரு பக்கம் அதிகரித்து வருகிறது.

அதிலும் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் சைபர் கிரைம் குற்றவாளிகள் டார்கெட் செய்யும் நாடுகளில் இந்தியாதான் முதன்மை வகிக்கிறதாம். இந்த சைபர் கிரைம் கும்பல், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், அரசு அமைப்புகள் என அனைத்தையும் டார்கெட் செய்கின்றவனாம்.
போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத கம்ப்யூட்டர் அமைப்புகள் மற்றும் நெட்வொர்க்குகளே இந்த சைபர் கிரைம் கும்பலின் டார்கெட். ரேன்சம்வேர் போன்ற மென்பொருள்களை அனுப்பி கண்ணிகளில் உள்ள பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கிய தரவுகளை திருடி அதன் மூலம் பணத்தை கொள்ளையடிப்பதே இவர்களின் இலக்காக உள்ளது.
அதிலும் சிலர் வைக்கும் பாஸ்வேர்டுகள் சைபர் கிரைம் கும்பலுக்கு கொஞ்சம் கூட கஷ்டமே வைக்காமல் கதவை திறந்து விட வைக்கும் அளவுக்கு உள்ளது. பொதுவாக வங்கி கணக்கு செயலிகள் உள்பட பல செயலிகள் பயனாளர்கள் எளிதாக அணுகக் கூடிய வகையில் 4 டிஜிட் பாஸ்வேர்டுகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது.
சில பயனர்களோ பாஸ்வேர்டு மறந்து விடக்கூடாது என்பதற்காக தங்கள் பிறந்த தேதி, 1234, 0000 என எளிதாக ஹேக்கர்கள் கைவரிசை காட்டும் அளவுக்கு வைத்திருப்பார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பொதுவான 4 டிஜிட் பாஸ்வேர்டுகள் குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. 34 லட்சம் PIN எண்களை ஆய்வு செய்ததில் பலரும் மிக எளிதான பாஸ்வேர்டுகளையே வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
1234,
1111
0000
1212
7777
1004
2000
4444
2222
6969
எளிதான பாஸ்வேர்டுகள் வைத்திருப்பது PIN- சைபர் கிரிமினல்கள் எளிதாக உங்கள் அக்கவுண்ட்டை ஹேக் செய்ய முடியும்.
சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் சிக்கி பணத்தை பறிகொடுக்காமல் இருக்க பாஸ்வேர்டுகளை மிகவும் வலுவாக வைப்பது அவசியம். பிறந்த தேதி.. போன் நம்பரின் கடைசி நான்கு இலக்கங்கள், முதல் நான்கு இலக்கங்கள் போன்ற எளிதில் யூகிக்க கூடிய பாஸ்வேர்டுகளை செட் செய்வது நிதி இழப்புக்கே வழிவகுக்கும் என்கிறார்கள் அத்துறையை சேர்ந்த நிபுணர்கள்.
ESET - சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜேக் மூரே கூறுகையில், எளிதில் யூகிக்க கூடிய பாஸ்கோடுகளை பயன்படுத்துவது சைபர் தாக்குதலுக்கு எளிதில் ஆட்படும். பாதிப்புக்குள்ளாகும் வரை பலரும் இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. எனவே பாஸ்கோடுகளை செட் செய்யும் போதே உஷாராக எளிதில் யூகிக்க முடியாத எண்களை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.












Click it and Unblock the Notifications