வயதோ 95... கொரோனாவையும் போராடி வென்ற 'தோழர்' நல்லகண்ணு... மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்,
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. பொதுமக்கள் முறையாகப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாறிய கொரோனா வகையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 95 வயதான அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நல்லகண்ணு விரைவாக கொரோனா தொற்றில் இருந்து மீள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் தெரிவித்திருந்தனர்.
தற்போது சுமார் ஒரு வாரத்திற்குப் பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நல்லகண்ணு மீண்டுள்ளார். வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்த அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 3000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,99,807ஆக அதிகரித்துள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 21,958ஆக உயர்ந்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications