இதுதான் வித்தியாசம்.. தெளிவான நடைபோடும் கமல்.. தொடர்ந்து தடுமாறும் ரஜினி!
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இடையே உள்ள அரசியல் வேறுபாடுகள் என்னென்ன?
சென்னை: இதான்... இதேதான்... கமலுக்கும் ரஜினிக்கும் உள்ள வித்தியாசம். கட்சியை ஆரம்பித்து வரப்போகிற தேர்தல் வரை தனியாக நிற்க போகிறேன் என்ற "தில்" பேச்சுடன் கமலின் அரசியல் வளர்ச்சி வளர்ந்து கொண்டு போகிறது. ஆனால் ரஜினியோ கட்சியும் ஆரம்பிக்காமல், இருக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளை மாற்றியும், நீக்கியும், வந்து கொண்டிருக்கிறார்.
ரஜினி-கமல் ஒப்பீடு தேவையே இல்லை என்பதை ஏற்கனவே நாம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளோம் என்றாலும், இன்றையை சூழலில் அதை ஆழ்ந்து கவனிப்பதும், அலசி முடிவெடுப்பதும் ஒன்றாகி விட்டது.
கமலுடன் ரஜினியை ஒப்பிட வேண்டாம் என்றும் ரஜினி தரப்பு ரசிகர்களும், ரஜினியுடன் கமலை ஒப்பிட வேண்டாம் என்று கமல் தரப்பு ரசிகர்களும் சொல்லி வருகிறார்கள். கட்சியை ஆரம்பிக்க போறேன், ஆரம்பிக்க போறேன்னு ரஜினி சொல்லிட்டே இருந்த நிலையில், திடீரென்று கட்சியை ஆரம்பித்து முன்னேறவும் ஆரம்பித்துவிட்டதால் ரஜினியுடன் கமலை ஒப்பிட வேண்டாம் என்கிறார்கள் மய்ய உறுப்பினர்கள்.

ரஜினி தரப்பு வாதம்
அதேபோல, கமலை விட ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். கமலுக்கு இந்திய அளவில் என்றால் ரஜினிக்கு உலக அளவில் உண்டு. குறிப்பாக ஜப்பான், இலங்கை, மலேஷியா போன்ற நாடுகளில் கூட ரஜினிக்கு மன்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மற்றொரு காரணம், ரஜினி பொறுமையாக முடிவெடுப்பதாகவும், கமல் எல்லாத்திலயும் அவசரப்பட்டு அரசியல் முடிவுகளை அறிவிக்கிறார் என்று ரஜினி தரப்பில் வாதத்தை முன் வைத்தார்கள்.

அலட்சியமா? பொறுமையா?
நியாயம்தான்.. எல்லாம் சரிதான்... ஆனால் இவ்வளவு பொறுமை அவசியமா? தேர்தலுக்கு கூட்டணி விஷயங்களே பேச ஆரம்பித்துவிட்டுக்கூட எதுவுமே கட்சி அறிவிப்பு பற்றி பேச்சு, மூச்சில்லாமல் இருப்பதன் பெயர் பொறுமையா? அலட்சியமா? பயமா? எதுவென்று தெரியவில்லை.

இவ்வளவு பொறுமையா?
இதை என்னவென்று கண்டுபிடிப்பதற்கு முன்னாடியே, மக்கள் மன்ற நிர்வாகிகள் அடுத்த கட்சிக்கு போக ரெடியாக விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படி ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் வேறு வேறு கட்சிக்கு தாவ ஆரம்பித்தும்கூட இவ்வளவு பொறுமை ரஜினிக்கு அவசியமா என்று கேள்வி எழுகிறது.

தடித்த வார்த்தைகள்
எப்படி பார்த்தாலும் மக்களின் பல்ஸை அறிந்து வைப்பவர்கள்தானே அரசியலில் வெற்றி பெற முடியும்? எந்த கிராமத்துக்கு ரஜினி இதுவரை சென்று மக்களின் ஆழத்தை கண்டிருக்கிறார்? எந்த போராட்டத்தை முன்னெடுத்து மக்கள் மன்றத்தை வழிநடத்தி வந்திருக்கிறார்? எந்த அரசியல் கட்சி, அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிராக தடித்த வார்த்தைகளுடன் அறிக்கையோ, கண்டனமோ தெரிவித்திருக்கிறார்? என்பதையும் தமிழக மக்கள் பார்த்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

முரட்டுக்காளை
அதனால் வரும் தேர்தலில் கமல் ஜெயிக்கிறாரோ, தோற்கிறாரோ தெரியாது, ஆனால் நாளுக்கு நாள் கமலின் அரசியல் வளர்ச்சி "விஸ்வரூபம்" எடுக்கிறது, ரஜினியின் அரசியலோ வெறும் "கர்ஜனை"யாகவே உள்ளது... காளை "முரட்டுக்காளை" ஆகுமா.. காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
-
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல்












Click it and Unblock the Notifications