திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம்
சென்னை: திமுக, அதிமுக இரண்டும் முக்கியமான சில அதிரடி வாக்குறுதிகளை தேர்தலுக்கு வழங்கி உள்ளன. இரண்டு திராவிட கட்சிகளும் வழங்கிய முக்கியமான சில டாப் வாக்குறுதிகளின் ஒப்பீடுகளை இங்கே பார்க்கலாம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் தகித்துக்கொண்டிருக்கிறது. 'திராவிட மாடல்' ஆட்சியைத் தொடரத் துடிக்கும் தி.மு.க ஒருபுறம், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத் துடிக்கும் அ.தி.மு.க மறுபுறம் என ரணகளமாக இருக்கிறது அரசியல் களம். இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கைகளைத் தட்டிவிட்டுள்ளன.

மகளிர் திட்டங்கள்: ரூ.2,000 vs ஃப்ரிட்ஜ்!
பெண் வாக்காளர்களைக் கவர இரண்டு தரப்பிலுமே அதிரடி அறிவிப்புகள். ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கி வரும் தி.மு.க, அதை அப்படியே இரட்டிப்பாக்கி ரூ.2,000 ஆக உயர்த்துவோம் என அறிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என ஸ்டாலின் ஸ்கோர் செய்கிறார்.
இதற்குப் போட்டியாக, எடப்பாடியார் தரப்பில் 'குலவிளக்கு' திட்டத்தின் கீழ் ரூ.2,000 மானியம் மற்றும் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இலவச பிரிட்ஜ் வழங்கப்படும் என 'ஜெயலலிதா' பாணியில் அதிரடி காட்டியுள்ளனர். இல்லத்தரசிகளின் ஓட்டு யாருக்கு என்பதில் இப்போதே பட்டிமன்றம் ஆரம்பமாகிவிட்டது.
மாணவர்களும் லேப்டாப்பும்!
கல்வித்துறை என்று பார்த்தால், இளம் தலைமுறையினரை கவர இரண்டு கட்சிகளுமே ஆர்வமாக உள்ளன. 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தி.மு.க வாக்குறுதி அளித்துள்ளது. அ.தி.மு.க-வோ அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் தரப்படும் எனத் தனது பழைய திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. உயர்கல்வி மாணவர்களின் ஓட்டுகள் இந்த லேப்டாப் மேஜிக்கில் விழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விவசாயிகள் மற்றும் ஓய்வூதியம்
விவசாயிகள் விஷயத்தில் இருவருமே சம பலத்தில் மோதுகிறார்கள். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 என தி.மு.க விலை நிர்ணயம் செய்திருக்கிறது. ஓய்வூதியதாரர்களைப் பொறுத்தவரை, முதியோர் ஓய்வூதியத்தை ரூ.2,000 ஆக உயர்த்தப்போவதாக இரண்டு கட்சிகளுமே ஒரே புள்ளியில் இணைகின்றன. மீனவர்களுக்கான மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை ரூ.12,000 ஆக உயர்த்துவதிலும் இரண்டு தரப்புக்கும் மாற்றுக் கருத்தில்லை.
வீடு மற்றும் மருத்துவம்
இருப்பிடம்: 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தருவோம் என்பது தி.மு.க-வின் பிளான். அ.தி.மு.க-வோ 'அம்மா இல்லம்' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு இலவச வீடு என வாரி வழங்குகிறது.
மருத்துவம்: மருத்துவக் காப்பீடு உச்ச வரம்பை 10 லட்சமாக உயர்த்துவதாக தி.மு.க கூற, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்ற பெரிய சிகிச்சைகளுக்கு முழு அரசு நிதியுதவி அளிக்கப்படும் என அ.தி.மு.க அப்ளாஸ் வாங்குகிறது.
மாநில உரிமை: ஒரே குரல்!
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தேசிய கல்விக் கொள்கையை (NEP) எதிர்ப்பதிலும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதிலும் இரு கட்சிகளுமே ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. டெல்லிக்கு எதிராகத் தமிழக உரிமைகளை மீட்போம் என்பதில் இருவருமே குரலை உயர்த்தியுள்ளனர்.
தி.மு.க 525 வாக்குறுதிகளுடன் 'மெகா' பிளானில் இருக்கிறது. அ.தி.மு.க 297 வாக்குறுதிகளுடன் 'தரமான' தாக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. இந்த 'வாக்குறுதி மழையில்' நனைந்து மக்கள் யாருக்கு மகுடம் சூட்டப் போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!
-
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications