'பத்தவைக்கும்'.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. அனிருத் கண்ணில் மட்டும் ட்ரோல் பட்டால்.. அவ்வளவுதான்
சென்னை: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் தேவரா படத்தின் முதல் பாகம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ஆகஸ்ட் 5ம் தேதியான நேற்று வெளியானது. 'பத்தவைக்கும்' என்ற பெயரில் தமிழில் வெளியாகி உள்ள இந்த பாடல், சிங்கள மொழி பாடலான Manike Mage Hithe பாட்டின் காபி என்று அனிருத்தை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
சுதாகர் மிக்கிலினேனி - கோசராஜு ஹரிகிருஷ்ணா தயாரிப்பில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் (ஸ்ரீதேவி மகள்), சயிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷினே டாம் செக்கோ ஆகியோர் நடிப்பில் தேவரா என்ற பிரம்மாண்டமான திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரப்போகிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு தெலுங்கு திரையிலகில் இருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் நேற்று வெளியானது. இதில் தமிழில் 'பத்தவைக்கும்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்பாடல் யூடியூப் மியூசிக்கில் டாப் 4 என்கிற அளவில் டிரெண்டாகி வருகிறது.
இந்த பாடல் தெலுங்கில் சுட்டமல்லே என்ற பெயரில் வெளியாகி உள்ளது. தெலுங்கு பாடல் யூடியூப் மியூசிக்கில் டாப் 3 என்கிற அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்தியிலும் இப்பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. தமிழ் மற்றும் இந்தியில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடித்துள்ள பாடல் என்பதற்காக பலரும் பார்த்து ரசிக்கிறார்கள். இந்த பாடல் வெளியான ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது.

அதேநேரம் இப்பாடலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று ரசிர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். குறிப்பாக சிங்கள மொழி பாடலான Manike Mage Hithe பாட்டின் காப்பி என்று விமர்சித்து மீம்ஸ் வீடியோ போட்டு வருகிறார்கள். இந்த சிங்களப்பாடலுக்கு சம்பந்த் சங்கீத் இசையமைத்து இருந்தார். ஆல்பம் பாடலான இதனை துல்ஜானா ஆல்வீஸ் பாடியிருந்தார்.
இதேபோல் ஜவான் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த டூயட் பாட்டிலும் சில இடங்கள் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கிறார்கள். ஏற்கனவே அனிரூத் இசையமைத்த பல பாடல்கள் காப்பி அடிக்கப்பட்ட குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அந்த பாடல்கள் எல்லாம் காப்பி அடிக்கப்பட்டவை என்று எந்த இசையமைப்பாளரும் குற்றம்சாட்டவில்லை.. அதேநேரம் இப்போது போடப்பட்டுள்ள தேவரா படத்தின் 'பத்தவைக்கும்' பாடல் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
முன்னதாக அனிரூத் இசையமைத்த வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடலில் கடைசியாக வரும் கட்டுமல்லி கட்டி வச்சான்... என்று ஆரம்பிக்கும் பாடல் வரி தொடங்கி இறுதி வரை, மொச்சை கொட்டை பல் அழகி பாடலை காப்பி அடித்ததாக அப்போது கடும் விமர்சனங்களை எழுப்பினார்கள். இப்போது சிங்கள பாடல் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அனிரூத் தரப்பில் இருந்தோ, அல்லது பட தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இருந்தோ எந்த பதிலும் இதுவரை வரவில்லை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications