ஸ்டாலினின் "ரைட்ஹேண்ட்".. வேவு பார்க்கிறாராமே.. அதுவும் "அவங்களையே".. கோட்டையில் பரபரப்பு
முதல்வரின் உதவியாளர் மீது பரபரப்பு புகார் ஒன்று எழுந்துள்ளது
சென்னை: ஒரு முக்கியமான விஷயம் கசிந்து வருகிறது.. முதல்வர் ஸ்டாலினுடன் இருப்பவரே வேவு பார்க்கிறாராம்.. இப்படி ஒரு குற்றச்சாட்டு கோட்டையில் இருந்து எழுந்துள்ளது.
இந்த முறை திமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.. திமுக அரசை என்ன சொல்லி விமர்சிப்பது என்று எதிர்க்கட்சிகள் குழம்பும் அளவுக்கு மாஸ் காட்டி கொண்டிருக்கிறார் முக ஸ்டாலின்.
ஒருபக்கம் எதிர்க்கட்சிகளை திணறடிப்பது.. மறுபக்கம் மக்கள் நலனில் அக்கறை, அதிரடி திட்டங்கள் என கலக்கி கொண்டிருக்கிறது திமுக அரசு.

லியோனி
இப்படிப்பட்ட சூழலில்தான் ஒன்றிரண்டு குற்றச்சாட்டுகள் மெல்ல எழுந்து வருகின்றன.. லியோனி நியமனம் இப்போதைக்கு இருந்திருக்க கூடாது என்பதே பரவலான பேச்சு.. சர்ச்சையில் ஏற்கனவே சிக்கியவரை, மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தியதால், எதிர்க்கட்சிகள் இதை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டன.. தமிழக அரசின் திட்டக்குழு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட குழுவினை யாரும் குறை சொல்ல முடியாது.. அந்த அளவுக்கு வலிமையான டீம் அது.. அதனால்தான் லியோனியை வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்சனையை துவக்கி உள்ளன.

முதல்வர் செயலாளர்
இந்நிலையில்தான் இன்னொரு விஷயம் திமுகவுக்குள்ளிருந்தே வெடித்துள்ளது.. இப்போதைக்கு முதல்வரின் செயலாளராக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கின்றனர். முதல்வரின் உதவியாளராக இருக்கும் ஒருவர் மீதுதான் தற்போது புகார் கிளம்பி உள்ளது.. இவர் வேவு பார்க்கிறாராம்.. இப்படி வேவு பார்ப்பதாக கோட்டையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உதவியாளர்
உதவி பிரிவு அலுவலராக தலைமை செயலகத்தில் வேலைக்கு சேர்ந்த இவர், தற்போது சார்பு செயலாளராக இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டாலினின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டார். ஸ்டாலினின் நேர்முக உதவியாளராக இருப்பதால், முதல்வருக்கு எல்லாமுமே நான் தான் என்று சொல்லி வருகிறாராம்.

என்ன காரணம்?
இதே முதல்வர் அலுவலகத்தில் இவருக்கு மேலே பல அதிகாரிகள் இருக்கிறார்கள்... ஆனால் யாரையுமே இந்த உதவியாளர் மதிப்பதில்லையாம். அலுவலக பணியாளர்களை ஒருமையில் அழைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். இவரிடம் பெர்மிஷன் வாங்காமல் ஸ்டாலினை யாரும் சந்திக்கக் கூடாது என அலுவலர்களுக்கு இவரது ஆர்டராக உள்ளதாம்.

சர்ச்சை
மேலும், ஸ்டாலினின் செயலாளர்களை வேவு பார்க்க செயலாளர்களின் அலுவலக பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளும் இவர், செயலாளர்களை பற்றி தவறான தகவல்களை ஸ்டாலினிடம் சொல்வதாக முதல்வரின் அலுவலக அதிகாரிகள் முணுமுணுக்கின்றனர்... இவரால் பலர் மன உளைச்சலில் இருக்கிறார்களாம். முதல்வர் கவனிப்பாரா?
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications