சிக்கலில் உதயநிதி? தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்.. விஜய் பற்றிய இரட்டை அர்த்த பேச்சால் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று முதல்வர் விஜய்யை, நடிகை ஒருவருடன் தொடர்புப்படுத்தும் நோக்கில் இரட்டை அர்த்தத்தில் பேசியது சர்ச்சையானதால் அவர் மீது நடவடிக்கை கோரி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

udhayanidhi stalin women commission

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுக்க தவறியதாக கூறி நேற்று திமுக சார்பில் தஞ்சாவூரில் ஆளும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்த்துக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.

மேடையில் முன்னாள் அமைச்சர்கள் கேஎன் நேரு, எம்ஆர்கே பன்னீர் செல்வம் உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து இருந்தனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.

மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, ''கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வந்திருக்க வேண்டம். ஆனால் காவிரியில் ஒரு செட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதுபற்றி இன்று இருக்கும் முதல் அமைச்சர் (விஜய்) வாய் திறந்து பேசவில்லை. முதல் அமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது தான்'' என்று பேசினார்.

இந்த சமயத்தில் திமுகவினர் நடிகை ஒருவரின் பெயரை கூறி கோஷமிட்டனர். அதை கேட்ட உதயநிதி ஸ்டாலின், ''எங்கே தண்ணீர் வருகிதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும்.. நான் காவிரியை கூறினேன்'' என்று இரட்டை அர்த்தத்தில் பொருள்படும்படி பேசினார்.உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெகவின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ செல்வக்குமார் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

''நேற்றைய தினம் தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைத்தார். பிரபலமான பெண் ஒருவரை நோக்கி முகம்சுளிக்கும் வகையில் ஆபாசமான கருத்தை கூறினார் இது பொதுவாழ்க்கையில் இருப்போர் பெண்களை கண்ணியமாக நடத்துவதை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். பெண்கள் பற்றி ஆபாசமாக சொல்லை பயன்படுத்தி பேசிய அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்க வேண்டும். பொது மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட பிஎன்எஸ் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்'' என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிராக தற்போது தவெக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு - கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்று உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் தவெகவின் மகளிர் அணியினர் போராட்டம் நடத்த உள்ளனர். இப்படியான சூழலில் உதயநிதி ஸ்டாலின் மீதான தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டு இருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+